அண்ணாமலை மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும்
அறிக்கைகள்
353 Views
Published:
05 Mar 2023
![]()
தமிழகத்தை தாண்டி, தற்போது இந்திய அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருகை குறித்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலை பற்றி தமிழக பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட கருத்தை நேரடியாக எதிர் கொள்ளாமல் காவல்துறையின் சைபர் செக்யூரிட்டியை பயன்படுத்தி நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு கருத்தின் மீது கருத்துச் சொல்வதற்கே வழக்குகள் என்றால் ஜனநாயகம் அதை எப்படி ஏற்றுக்கொள்ளும்? எனவே திரு அண்ணாமலை அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் எவ்வித நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டுமென தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.03.2023






