தமிழகத்தில் மீண்டும் கடும் மின் கட்டண உயர்வு!
319 Views
![]()
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு இதுதான் இந்த அரசு கொடுக்கும் பரிசா?
தமிழக மக்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வாலும், ஏற்கனவே தமிழக அரசால் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வுகளாலும் பெரும் துன்பப்பட்டு வருகிறார்கள்! இந்நிலையில் குடிசை வாசிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து மின் பயன்பாட்டாளர்களும் பாதிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல; மின்கட்டண உயர்வு கடும் கண்டனத்துக்குரியதாகும்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக ஆளும் தரப்பினருக்கு வாக்களித்த மக்களுக்கு மின் கட்டண உயர்வு தான் ஆட்சியாளர்கள் தரும் பரிசா? உடனடியாக மின் கட்டணத்தை உயர்வை திரும்ப பெற புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
15.07.2024






