நெஞ்சார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.!
461 Views
![]()
எமது பொதுவாழ்வில் முதன்முறையாக உடுமலைப்பேட்டையில் கொண்டாடிய ஏப்ரல் 3 பிறந்தநாள் விழாவை எம்மை ஈன்றெடுத்து உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தையார் கருப்பசாமி குடும்பர் – தாயார் தாமரையம்மாள்; எனது 50 ஆண்டுக்கால போராட்ட வாழ்விற்கு அடிகோலிய மறைந்த மூத்த சகோதரர்கள் ராஜு, துரைச்சாமி, செல்லமுத்து; சகோதரி பாக்கியம் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன்.
திருமணமான நாள் முதல் குடும்பச் சுமையை ஏற்றுக் கொண்டு நான் பொதுவாழ்வில் ஈடுபட உற்ற துணையாக விளங்கிய மருத்துவர் சந்திரிகா கிருஷ்ணசாமி; குழந்தைகள் மருத்துவர் சங்கீதா ஓம்நாத், மருத்துவர் ஓம்நாத், மருத்துவர் சியாம், மருத்துவர் கிருஷ்ண சமீரா மற்றும் சகோதரர் திருமூர்த்தி; சகோதரிகள் தங்கம்மாள், நாகம்மாள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது மிக முக்கிய காலகட்டமான ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பின் போது உற்ற துணையாக விளங்கிய ஆசிரியப் பெருந்தகைகளுமான புவியியல் ஆசிரியர் திரு.நடராஜன், தமிழாசிரியர் துரையரசன், கணித ஆசிரியர் பூளவாடி ஆறுமுகம், தலைமை ஆசிரியர் புக்குளம் தண்டாயுதபாணி ஆகியோர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் சகோதரர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும்; பாஜக மாநில தலைவர் திரு.கு.அண்ணாமலை அவர்களுக்கும்; சகோதரர் நடிகர் சரத்குமார், சகோதரர் தேவநாதன் யாதவ் அவர்களுக்கும், டாக்டர் அர்ஜீன மூர்த்தி அவர்களுக்கும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களுக்கும், தோழமை கட்சியினருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும், நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடுமலைப்பேட்டையில் 03.04.2023 – திங்கட்கிழமை நடைபெற்ற எனது பள்ளி ஆசிரியப் பெருந்தகைகளைக் கௌரவிக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில் – ஜீயர் திரு. சடகோப ராமானுஜர் ஜி அவர்களுக்கும்;
வாழ்த்துரை வழங்கிய SWEET JESUS INTERNATIONAL MINISTRIES, COVAI அருட்தந்தை. H.இம்மானுவேல் ஜேக்கப்; தமிழ்நாடு – பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு – நாகசக்தியம்மன் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் ஜெகத்குரு பாபுஜி சுவாமிகள்; முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர், அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.பி. வேலுமணி MLA; முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர், அஇஅதிமுக திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர், திரு. உடுமலை கா. ராதாகிருஷ்ணன் MLA; கொங்கு இளைஞர் பேரவை தலைவர் திரு. தனியரசு Ex.MLA; தமிழ்நாடு விஸ்வகர்மா மகாசன மத்திய சங்க மாநில தலைவர் திரு. ஏ.எம். தங்கராஜ்; தமிழ்நாடு சாலியர் மகாசன சங்க மாநில தலைவர் திரு. அ. கணேசன் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுக் கூட்ட நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் தமிழ்மணி, மகாலிங்கம், ராஜேஷ், விஜயகுமார், சுரேஷ், கலையரசி சுரேஷ், கவின், பெரியசாமி, சாமிநாதன் உள்ளிட்டோருக்கும்; மாநில பொறுப்பாளர்கள் வே.க.அய்யர், எஸ்.எம்.செல்லத்துரை, ஜான் கிறிஸ்டோபர், இரும்பொறை சேதுராமன், வாழையூர் குணா, கோவை சுப்பிரமணியன், கோட்டைப்பட்டி ராமராஜ், கதிரேசன், பழனி விஜயகுமார், தூத்துக்குடி கிருபை ராஜ், கோவில்பட்டி வேலுச்சாமி (IT WING), தென்காசி ராஜேந்திரன், தேனி நாகேந்திரன், திருநெல்வேலி சிவக்குமார், வேலூர் ஜெயசீலன், சென்னை பிரகாஷ் பாண்டியன், தூத்துக்குடி சரஸ்வதி, விருதுநகர் காளீஸ்வரி உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களுக்கும்; தென்காசி இராசையா, அக்கரைப்பட்டி செல்வராஜ், விருதுநகர் வழக்கறிஞர் செல்வகுமார், திருப்பதி, திருநெல்வேலி ராமர், தூத்துக்குடி பரமசிவம், மனோகரன், மதுரை தாமோதரன், திண்டுக்கல் சிவநாத பாண்டியன்-கோபாலகிருஷ்ணன், தேனி சிவக்குமார், இராமநாதபுரம் பாலுச்சாமி, சிவகங்கை சந்திரசேகர், புதுக்கோட்டை அமலதாஸ், திருச்சி சண்முகம், தினகரன், கரூர் அசோகன், சேலம் எஸ்.எம்.பாபு, ஈரோடு ஐமன்னன், பெரம்பலூர் அருண்குமார், நாமக்கல் செல்வகுமார், நீலகிரி அய்யர், வால்பாறை ரஞ்சித் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கும்; அதேபோன்று எமது வரலாற்றுக் காணொளியைத் தயார் செய்தும், நிகழ்ச்சியையும் நேரலையும் செய்த தகவல் தொழிற் நுட்ப பிரிவைச் சார்ந்த நெல்லை சிவா, பாலாஜி, சங்கர் குரு, சரவணன் ஆகியோருக்கும்; பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
04.04.2023





