இந்திய வம்சாவளி விமானி சுமீத் மொச்சார் அவர்களின் அளப்பரிய தைரியமும் சமயோசிதமும் என்றென்றும் பாராட்டுக்குரியது!

இந்திய வம்சாவளி விமானி சுமீத் மொச்சாருக்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி புகழாரம்!

அறிக்கைகள்
s2 7 Views
dr-krishnaswamy-praises-indian-pilot-sumeet-mochar-flydubai-incident
Published: 02 Oct 2026

Loading

இந்திய வம்சாவளி விமானி சுமீத் மொச்சார் அவர்களின் அளப்பரிய தைரியமும் சமயோசிதமும் என்றென்றும் பாராட்டுக்குரியது!
…………………………………………….

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘ஃப்ளை துபாய்’ (Fly Dubai) விமானத்தில் பயணித்த 174 பயணிகள், அவ்விமானத்தை இயக்கிய இந்திய வம்சாவளி விமானியான சுமீத் மொச்சாரின் சாதுரியத்தாலும் தைரியத்தாலும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தைக் கடத்தி, ஒரு பெரிய இலக்கின் மீது மோதச் செய்யும் சக துணை விமானியின் சதித்திட்டத்தைப் பலத்த காயமுற்ற பின்னரும் அவர் போராடித் தடுத்துள்ளார்.

தரையில் இருந்து 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், விமானிகளின் அறையில் நடந்த கடும் மோதலின்போது, ஒரே நிமிடத்தில் 17,000 அடி கீழே இறங்கியுள்ளது. இது விமானத்தில் எத்தகைய பெரும் அதிர்வுகளையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதைப் பயணிகள் நன்கு உணர்ந்திருப்பர். அந்த பதட்டமான சூழலிலும் மன உறுதியோடு விமானி சுமீத் மொச்சார் விமானிகளின் அறையை திறந்து விட்டதால் பயணிகளால் விமானிகளின் அறைக்குள் வரமுடிந்துள்ளது.

பயணிகளில் ஒருவர் விமானப் பயிற்சி பெற்றவராக இருந்ததால், அவரது துணையுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு 174 பயணிகளின் உயிர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது; வேறு ஒரு இலக்கின் மீது மோதும் சதியும் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி விமானி சுமீத் மொச்சார் அவர்களின் அளப்பரிய தைரியமும் சமயோசிதமும் என்றென்றும் பாராட்டுக்குரியது!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
02.10.2026