புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் முன்னாள் செயலாளர் ராமராஜ் மறைவு: டாக்டர் க.கிருஷ்ணசாமி இரங்கல்!
அறிக்கைகள்
1 Views

Published:
18 Sep 2026
![]()
இரங்கல் செய்தி
புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் கோட்டைப்பட்டி திரு. கோ. ராமராஜ் அவர்கள், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைகிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவார்கள்.
– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18.09.2026







