குன்னூர் விபத்து – புதிய தமிழகம் கட்சி இரங்கல்.! உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் வழங்க வேண்டும்.!

அறிக்கைகள்
s2 246 Views
  • குன்னூர் விபத்து புதிய தமிழகம் கட்சி இரங்கல்.!
  • குன்னூர் விபத்து புதிய தமிழகம் கட்சி இரங்கல்.!
Published: 01 Oct 2023

Loading

தென்காசி மாவட்டம் கடையம், பாரதிநகர், ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்று திரும்புகின்ற வழியில் நேற்று மாலை நடந்த விபத்தில் 9 பேர் மரணம் எய்தி இருக்கிறார்கள்; 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில அரசு சார்பாக குடும்பத்திற்கு தலா 2 லட்சம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அது எவ்விதத்திலும் போதாது; குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், இந்த விபத்தின் உண்மை காரணம் கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.10.2023.