தேர்தல் பத்திரம் ரத்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு – இந்திய ஜனநாயகம் தளைக்கும் – புதிய தமிழகம் கட்சி வரவேற்பு!
505 Views
![]()
இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட Electoral Bonds எனப்படும் ”தேர்தல் பத்திர திட்டத்தை” உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது; இது வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தில் தேர்தலைச் சந்திக்கக்கூடிய அரசியல் கட்சிகளுக்குள் சிறிய அல்லது பெரிய; ஆட்சியில் உள்ள அல்லது ஆட்சியில் இல்லாதவர்கள் என்ற எவ்வித பேதமைகளும் நிலவக் கூடாது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பெரிய அளவிற்கு நிதி திரட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அடிப்படையில், அது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டியே இன்று உச்சநீதிமன்றம் இத்திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலம் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும்; தளைக்கும். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாக அமலாக்கப்பட்டு எதிர்காலத்தில் இதில் எவ்வித குளறுபடிகளும் ஏற்படவில்லை எனில், இதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் களத்தில் சம வாய்ப்புள்ளதாக அமையும். வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.02.2024






