ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் – புதிய தமிழகம் கட்சி வாழ்த்து செய்தி

அறிக்கைகள்
s2 433 Views
  • சி.பி.ராதாகிருஷ்ணன்

    சி. பி. ராதாகிருஷ்ணன்

  • சி.பி.ராதாகிருஷ்ணன்
Published: 12 Feb 2023

Loading

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள
சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு
புதிய தமிழகம் கட்சியின் வாழ்த்துக்கள்..!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமாகிய சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1998, 1999 ஆம் ஆண்டுகளில் அவர் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்; தலைசிறந்த தேசப்பற்றாளர்; அவருக்கு இதுபோன்று ஒரு நல்ல உயரிய பதவி வழங்கப்பட்டிருப்பது, அவருக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டும் கடந்த 30 ஆண்டுகளாக நமக்கு இனிய நண்பராக விளங்கி வருபவர். அரசியல் வாழ்வில் அனைத்து மக்களின் அன்பைப் பெற்றதைப் போன்று, ஆளுநர் பொறுப்பிலும் ஜார்க்கண்ட் மாநில மக்களின் அன்பைப் பெற்று அம்மாநிலத்தின் மேம்பாட்டுக்குத் துணை நிற்கக் கூடியவராகவும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே நல்ல பாலமாகவும் விளங்கி, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபடுவார் என்பதில் பெருமை கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.02.2023.