370 சரத்து ரத்து குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

அறிக்கைகள்
s2 178 Views
  • Dr Krishnasamy 2
  • Dr Krishnasamy 2
Published: 11 Dec 2023

Loading

‘Nation First’ என்ற நமது பார்வையும் சரியானது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.!

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 வது பிரிவு, 2019 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் ரத்துச் செய்யப்பட்டு இந்திய ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் அளித்தார். அப்பொழுது தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் அப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிரான கருத்துக்களை கூறி வந்த நிலையில், காஷ்மீரை வேறொரு நாடாக அங்கீகரித்த 370 வது பிரிவை ரத்து செய்தது சரியானது; இந்திய தேசம் ஒன்றுபட்ட தேசமாக இருக்க வேண்டும்; காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என்ற கருத்தை தமிழகத்தில் நாம் தான் முதல்முதலில் பதிவு செய்தோம்.

உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 370 வது பிரிவு தற்காலிகமானது; அது ரத்து செய்யப்பட்டது சரி என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ‘Nation First’ என்ற நம்முடைய பார்வை எவ்வளவு சரியானது என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்துகிறது.

காஷ்மீர் குறித்து தீர்க்கமான முடிவை துணிச்சலோடு எடுத்த பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கும் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க இந்தியா! வளரட்டும் இந்தியர் ஒற்றுமை!!

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
11.12.2023.