கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்
501 Views
![]()
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளா்களிடம் பேசியது:
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி வன்முறையில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மது மற்றும் போதை பழக்கத்தினால் தினமும் 15 முதல் 20 கொலைகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடே போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு யாா் கையில் இருக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுக அரசு எல்லாவற்றிலும் தோல்வி கண்டு வருகிறது. இதை மறைப்பதற்காக சனாதனம் என்ற கருத்தை கையில் எடுத்துள்ளனா். திமுக சொல்லும் சனாதனம் சமூகத்திற்கு கேடு இல்லை. திராவிடம்தான் தமிழ் சமூகத்திற்கு கேடாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்குப் பகுதி வளா்ச்சி பெற வேண்டுமென்றால் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
திமுக அரசு தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அதிமுக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. 2024இல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றாா் அவா்.
செய்தி: தினமணி






