தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது – குற்றங்கள் நடக்க மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது!

பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேந்த 4 போ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவா்களது குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் பல்லடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கள்ளக்கிணறு கிராமத்தில் நிகழ்ந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. குற்றங்கள் நடக்க மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது.
கொலை குற்றவாளிகள் மீது விரைவாக குற்றப்பத்ரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். காவல் துறையில் தேவையான இடங்களில் புறக்காவல் நிலையம் அமைப்பதோடு, இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் என்பது ஏற்புடையது அல்ல. அவா்களது குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், அவா்களது குழந்தைகளுக்கான கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.
செய்தி – தினமணி நாளிதழ்