Loading

இஸ்லாமிய மக்களின் இரண்டு மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ரம்ஜான் ஆகும். தொடர்ச்சியாக முப்பது நாட்கள் அதிகாலை முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரையிலும் உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு மேற்கொண்டு அதன் நிறைவாகக் கொண்டாடுவதே நோன்பு பெருநாள் அல்லது ஈகை திருநாள் ஆகும்.

தொடர்ச்சியாக முப்பது நாட்கள் நோன்பு மேற்கொள்வதால் சுய ஒழுக்கமும் சுய கட்டுப்பாடும் அதைக் கடைப்பிடிக்கக்கூடிய ஒவ்வொருவரிடத்திலேயும் உருவாகிறது. இந்த மகத்தான ரமலான் திருநாளைக் கொண்டாடக்கூடிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வேளையில் உலக – பாரத – தமிழ் மக்கள் அனைவரிடத்தில் சமாதானமும், சகோதரத்துவமும் உண்டாகவும் வாழ்த்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
22.04.2023.