புதிய தமிழகம் கட்சியின் மாநில நிர்வாகி வீ. சுப்பிரமணியம் மரணம் – தலைவர் அவர்களின் இரங்கல் செய்தி

நினைவுகள்
s2 598 Views
  • மாநில நிர்வாகி வீ. சுப்பிரமணியம்

    மாநில நிர்வாகி வீ. சுப்பிரமணியம்

  • மாநில நிர்வாகி வீ. சுப்பிரமணியம்
Published: 03 Jan 2023

Loading

இரங்கல் செய்தி

புதிய தமிழகம் கட்சியின் மாநில நிர்வாகி வீ.சுப்பிரமணியம் அவர்களின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீ.சுப்பிரமணியம் அவர்கள் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக தங்கு தடையின்றி புதிய தமிழகம் கட்சியில் பயணம் செய்துள்ளார். தென்காசி மாவட்டம், மீன்துள்ளி என்ற கிராமத்தின் கிளைச் செயலாளராக தனது அரசியல் பணியைத் துவங்கி, மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளராகவும், பின் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டச் செயலாளராகவும், அதன் பின் மாநில நிர்வாகியாகவும் படிப்படியாக உயர்ந்து தனது கடைசி நிமிடம் வரையிலும் புதிய தமிழகம் கட்சியின் விசுவாசமிக்க தொண்டனாகச் செயல்பட்டு உள்ளார்.

அவர் நோய்வாய் பட்டது அறிந்து, கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு உயர் தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்; மீண்டும் நேற்று மாலை 5 மணியளவில் அவரிடம் நலம் விசாரித்தும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடத்திலும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தினேன். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமெய்தி உள்ளார். அவருடைய இழப்பு புதிய தமிழகம் கட்சிக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று மாலை நடைபெறும் அவரது நல்லடக்க நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் திரளாகக் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தலைமை நிலையத்தின் சார்பாக மாநில நிர்வாகிகள் வே.க.அய்யர்,  கதிரேசன், வாழையூர் குணா, இரும்பொறை சேதுராமன், கிருபை ராஜ், கோட்டைப்பட்டி கோ. ராமராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.01.2023.

புதிய தமிழகம் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் வி. சுப்ரமணியம்