அதிமுக அவைத்தலைவர் திரு. மதுசூதனன் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் இரங்கல்
நினைவுகள்
302 Views
Published:
06 Aug 2021
![]()
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. E.மதுசூதனன் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்ட போதெல்லாம் நடுநிலையாகவும், பாலமாகவும் நின்று அக்கட்சியின் ஒற்றுமைக்கு வலுச் சேர்த்தவர். அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.08.2021







