அடையாள மீட்பே !அதிகார மீட்பு பயணத்தில்.. புதிய தமிழகம் கட்சி பீடு நடை போடுகிறது!

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கும், தேவேந்திர குல வேளாளர்களுக்கும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடி பெற்ற வெற்றிகளை பட்டியலில் அடைத்து விட முடியாது .
உலக நாடுகள் உற்று நோக்கும் வகையில் பொது தளத்தில் புதிய தமிழகம் கட்சி மேலோங்கி வளர்ந்து வருகிறது. என்பதனை அரசியல் நோக்கர்கள் நன்கு அறிவார்கள்.
கடந்த காலங்களில் தேவேந்திர குல வேளாளர்களின் அடையாள மீட்புக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரலாறு படைத்துள்ளது. அடையாள மீட்பிற்காக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
20. 1 .2018 விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனின் பெயர் சூட்டிட உண்ணாவிரதம் .
ஜூலை 6. 7 .2018 தியாகியாரின் வாழ்க்கை வரலாற்றை தமிழக அரசு ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சேர்த்திட வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மாவட்ட செயலாளர்கள் மனு கொடுத்தனர்.
20. 1. 2018 மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்டிட உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
ஆண்டுதோறும் தேவேந்திர எழுச்சி பொங்கல் விழா, மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பொங்கல் விழா என தேவேந்திரகுல வேளாளர்களின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கவும், அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கும் , தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆளுமை மிக்க தலைவராக டாக்டர் ஐயா அவர்கள் திகழ்கிறார் என்றால் அது மிகையாகாது .
பட்டியல் வெளியேற்றத்துடன் கூடிய அரசாணை வெளியிட வலியுறுத்தி
6.10. 2017 ஆம் ஆண்டு சென்னையில் அடையாள மீட்பு மற்றும் பட்டியல் வெளியேற்ற சிறப்பு மாநாடு.
அதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து. நடைபெற்ற
மாநாடு ,உண்ணாவிரதம் ,பேரணி, ஆர்ப்பாட்டம், பின்வருமாறு ..
6 .12. 2017 டெல்லியில் பேரணி .
10 .1 .2018 கோவையில் உண்ணாவிரதம் .
6.02.2018 சென்னையில் உண்ணாவிரதம் .
6.5.2018 விருதுநகரில் உலக தேவேந்திர குல வேளாளர் ஒருங்கிணைப்பு மாநாடு.
புதிய தமிழகம் கட்சியின் 10வது மாநில மாநாடு .
6.08. 2018 தென்காசியில் மகளிர் அணி மாநாடு .
6 .10. 2018 திருச்சியில் இளைஞர் அணி முதல் மாநாடு .
15. 11.2018 சென்னை பிரிட்டிஷ் தூதரகத்தை நோக்கி பேரணி
11. 9.2019 அன்று டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் லட்சக்கணக்கானோர் பேரணியாக சென்று தியாகியாரின் நினைவிடத்தில் பட்டியல் வெளியேற்றம் , அவரது நினைவு நாள், பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் .மணிமண்டபம் கட்ட வேண்டும் .மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டிட வேண்டும் என தியாகியாரின் நினைவிடத்தில் சூளூரை ஏற்கப்பட்டது.
தேவேந்திரகுல வேளாளர்கள் வசித்து வரும் கிராமங்களில் ஊர் தலைவர் ,நாட்டாமை மற்றும் பொதுமக்களிடம் கையொப்பம் இயக்கம் நடத்தி அந்தப் படிவத்தினை அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் டாக்டர் ஐயா அவர்கள் நேரில் மனு கொடுத்தார்.
7.9.2019
அனைத்து மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட அமைப்பு குழு மூலம் தீர்மானம் இயற்றப்பட்டது .அந்தத் தீர்மானத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தது.
இப்படிப்பட்ட அளப்பரிய தியாகங்களின் வாயிலாக தான் மத்திய, மாநில அரசுகள் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் சட்டமாக இயற்றப்பட்டு தேவேந்திர குல வேளாளர் அரசாணையை பிறப்பித்தது. நாம் எதிர்பார்த்தது பட்டியில் வெளியேற்றம் இருந்த போதிலும் நாம் எடுத்த போராட்டத்தின் வெற்றியாக கருதுகிறோம்.
ஒரு சமூகத்தின் அடையாளத்திற்காக ஒரு கட்சி இவ்வளவு பெரிய அளப்பெரிய முன் முயற்சியை உலக அளவில் எடுத்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட தலைமையை நாம் பற்றிக்கொள்ள தவறினால் நம்மை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது .
கோடான கோடி தேவேந்திரர்களின் உயிர் நாடி கோரிக்கையான பட்டியல் வெளியேற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையில்..
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் ஐயா அவர்களை வெற்றி பெற வைக்க இன்று வலைதளங்களில் பொங்கும் புரட்சியாளர்கள் ,போராளிகள் அன்று தேர்தல் பரப்புரைக்காக ஊர் ஊராக வந்து பேசி தேவேந்திரர்களை கிறிஸ்தவ பாதிரியார்களின் பிடியில் இருந்து விடுவித்து வாக்கு பெற்றுத்தர முயலாதவர்கள் இப்போது பட்டியல் வெளியேற்றம் என்னாச்சு என மூடர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள் .
உலக அளவில் ஒன்றை கோடி பேர் வாழும் நாம் தென்காசி தொகுதிக்கு வந்து வாக்காளர்களிடம் பேசி வாக்கு வாங்கி கொடுத்திருந்தால் எளிதாக நாம் வெற்றி பெற்று இருக்க முடியும். அதையெல்லாம் செய்யாமல் வெறும் சாதி பெருமை பேசி வருடம் ஒரு முறை இமானுவேல் நினைவு நாளில் பரமக்குடிக்கு சென்றால் போதுமா? பாராளுமன்றம் போகாமல் பரமக்குடிக்கு போனால் மட்டும் பட்டியல் வெளியேற்றம் நடந்து விடுமா ? அல்லது அதிகாரம் கிடைத்திடுமா? சிந்தித்து அரசியலை நோக்கி பயணியுங்கள் .
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலவும் பேசத் தெரிந்தவன், எழுதத் தெரிந்தவன் எல்லாம் தலைவன்.
செப்டம்பர் 11 அன்று மட்டும் முளைக்கும் செப்டம்பர் 11 தலைவர்கள் அவ்வப்போது பிளக்ஸ் பேனரில் வருடம் தோறும் ஜொலிப்பார்கள் .
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பட்டியல் வெளியேற்றத்திற்காக எந்த குட்டி தலைவராவது போராடியது உண்டா ? பட்டியல் வெளியேற்றதற்காக சாலை மறியல், ரயில் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் ,உண்ணாவிரதம் என்று ஏதாவது ஒன்று உண்டா ?
அப்படியெல்லாம் போராட முன் வராத குட்டி தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து உலக அளவில் தேவேந்திரகுல வேளாளர்களை உச்சரிக்க வைத்த நடைமுறை புரட்சியாளர்!
தலைமுறை எழுச்சியாளர்!
டாக்டர் ஐயா அவர்களை விமர்சிக்க மட்டும் ஒன்று சேருவார்கள். அந்த ஒற்றுமையில்தான் திராவிட கட்சியின் பலமும், வெற்றியும் ஒளிந்து இருக்கிறது. இதை என்றுதான் உணரப்போகிறீர்கள்?
புதிய தமிழக கட்சியை தவிர்த்து விட்டு வேறு எந்த இயக்கமும் அல்லது ஒட்டுமொத்தமான இயக்கமும் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர்களின் அதிகாரத்தை மீட்க எவரும் ஒரு துரும்பை கூட கிள்ளி போட மாட்டார்கள். ஆனால் தினந்தோறும் தலைவர்கள் உருவாகும் சமூகம் ஆகிவிட்டது. இச்சமூக இளைஞர்களை பிரித்து போதைக்கு அடிமையாக்கி சுயலாபம் அடைகிறார்கள். அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்து தனது பாக்கெட்டை நிரப்பி கொள்கிறார்கள்.கேட்டால் நானும் தேவேந்திரன் என்ற பெருமை பேசுகின்றார்கள் . ஆனால் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. ஒரு எம்பி கூட இல்லை வெறும் வாய் சவடால் அடித்தும், வீர வசனம் பேசியும்,தேவேந்திரர்களை இன்னும் குழப்பி வருகிறார்கள். (ரிசர்வ் அடிமை எம்எல்ஏ, எம்பிக்களை தவிர்த்து )
தேவேந்திரர்களும் நல்ல தலைமை யார்? நல்ல தலைவர் யார்? ஊடகங்களிலும், உலக அளவிலும் தேவேந்திரகுல வேளாளர் என்று யாரால் உச்சரிக்க வைக்க முடிந்தது ? யாரால் சிவப்பு பச்சை வர்ண கொடிக்கு பெருமை? யாரால் சட்டமன்றத்தில் ஆளுமை செலுத்த முடியும் ?யாரால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியும்? யாரால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்? யாரால் நாம் விடுதலை பெற்றோம் ?யார் இரட்டை குவளை முறையை ஒழித்தது?
யாரால் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமை மீட்கப்பட்டது?
யாரால் கண்டதேவியில் தேர் இழுக்க முடிந்தது? யாரால் வெள்ளை அறிக்கை வாங்கி அரசு வேலையை உறுதி செய்ய முடிந்தது? யாரால் ஏழு தமிழர்களின் தூக்குத் தண்டனை ரத்து செய்ய முடிந்தது? யாரால் தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்தது? யாரால் சட்டமன்றத்தில் அதிக நேரம் பேச முடிந்தது? யாரால் நவநாகரிகமான அரசியலை முன்னெடுக்க முடிந்தது ? என கண்ணை மூடி சிந்தித்தாலும், கண்ணை திறந்து சிந்தித்தாலும், நமது நினைவுக்கு வருவது,
1992 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை டாக்டர் ஐயா அவர்கள் போராடிய போராட்ட வரலாற்றையும்,புதிய தமிழகம் கட்சியின் சாதனைகளையும் படித்துப் பார்த்தால் மனசாட்சி உள்ள எவரும் வேறு திராவிட கட்சியில் இருக்க மாட்டார்கள் . வேறு எந்த இயக்கத்திலும் பயணிக்க மாட்டார்கள்.
வேறு குட்டி புட்டி தலைவர்கள் பின்னால் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் ஒரு தலைவன் ஒரு சமூகத்திற்கு இதை விட பெரிய அளவில் சாதிக்க முடியாது. தன்மானத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும், சமூக விடுதலைக்காகவும், பட்டியல் வெளியேற்றத்திற்காகவும்,தன் வாழ்நாளெல்லாம் ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பேரறிவின் பெட்டகம் டாக்டர் ஐயா அவர்களின் கொள்கைதான் தியாகி இமானுவேல் சேகரன் கண்ட லட்சியம். அவர் சாதிக்க முடியாததை டாக்டர் ஐயா அவர்கள் கால் நூற்றாண்டாக ஏழை, எளிய , விளிம்பு நிலை மக்களின் அரசியல் அடையாளமாக புதிய தமிழகம் கட்சி விளங்கி வருகிறது. அதனின் புனிதத்தை உணராமல் இன்னும் புதிய தமிழகம் தலைமையை தீவிரமாக பற்றிக் கொள்ளாமல் தமிழர்கள் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை .
தியாகியாரின் லட்சியத்தை நிறைவேற்ற பரமக்குடிக்கு செல்ல வேண்டியது எப்படி அவசியமோ அதேபோல் பாராளுமன்றத்திற்கும் செல்ல வேண்டும்..நாம் ஆளும் வர்க்கமாக மாற வேண்டும். அதிகாரத்தை சுவைக்கும் சமுதாயமாக உயர வேண்டும் .சமூகப் பொருளாதார அரசியலில் முழுமையான வளர்ச்சியையும்,முன்னேற்றத்தையும் பெற புதிய தமிழகம் கட்சியில் தேவேந்திரர்கள் அனைவரும் ஓர் தலைமையின் கீழ் திரலும் போது தான் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்படும்.
பட்டியல் வெளியேற்றம் என்பதெல்லாம் ஒரு துளி மையில் சாத்தியமாகும் .
அதை விட்டுவிட்டு சாதி பழம் பெருமை பேசி ஆண்ட பரம்பரை என பேசிக்கொண்டே இருந்தால் அடுத்த தலைமுறை காரி முகத்தில் உமிழும் அவல நிலை இனி நீடிக்க வேண்டாம். அரசியலில் விழித்துக் கொள். பொது அரசியல் நீரோட்டத்தில் தன்னை தகவமைத்துக் கொள் .
பரமக்குடி சென்று தியாகிகாரின் நினைவிடத்தில் காட்டும் கும்பலை நாடாளுமன்றத் தேர்தல் களத்தில்.. வாக்கு செலுத்துவதில் காட்டு! சட்டமன்ற களத்தில் வாக்கு செலுத்துவதில் காட்டு. உண்மையாக சமூகத்தை நேசி! ஆட்சியதிகாரத்தை வென்றிடு! எஸ்சி பட்டியலை உடைத்திடு! அரசியலில் முன்னேறு! புதிய தமிழகம் கட்சியின் வரலாற்றை படித்து உணர்வீர்! டாக்டர் ஐயா அவர்கள் தலைமை ஏற்பீர்! இதையெல்லாம் சுய பரிசோதனை செய்யாமல்,
நம்மவரிடம் மட்டும் சுயமரியாதை பார்க்கும் நாம், பிறரிடம் அதுவும் திராவிட அரசியல்வாதிகளிடம் சொற்ப சலுகைகளுக்காக கூனி குறுகி நிற்பதையே கவுரவமாக எண்ணிக் கொள்பவர்களை எதைக்கொண்டு அடிப்பது ?அவர்களால் தான் இந்த சமூகம் பின்னடைவை சந்தித்து வருகிறது.
சுயமரியாதையைப் பற்றி பேசுபவர்கள், போலிகளிடம் சுயமாக இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டு , தனது சொந்த சாதியின் பலத்தை அடமானம் வைத்தும்,குடி போதைக்கு அடிமையாகி சிலர் தனது இன வரலாறு தெரியாமல், தனது பிறப்பின் ஆதி மூலம் தெரியாமல் எவரெவர் பேச்சையோ கேட்டு தலையாட்டும் பொம்மைகளாக இருந்து கொண்டும் ,அவர்களிடம் வாலாட்டும் பிராணிகளாக இருந்து கொண்டும், திராவிட மாடலின் கைக்கூலியாக இருந்து கொண்டும் ,ஒட்டுமொத்த மனித குல விடுதலைக்காக போராடும் புதிய தமிழகம் கட்சியை சாதிக் கட்சி என குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி பார்க்கும் பேராபத்து தொடரத்தான் செய்கிறது .
அவர்களுக்கு தெரியுமா ?ஏழு தமிழர்களின் தூக்குத் தண்டனை ரத்துக்காக போராடியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ரயில் மறியல் போராட்டம். மாஞ்சோலை போராட்டம். இலங்கை தமிழர்களுக்காக டெல்லியில் இலங்கை தூதரகம் முற்றுகைப் போர் . மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் வாழ்வுரிமை மீட்பு .காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு 370 நீக்கியதை வரவேற்றது.
நீட் தேர்வையும்,பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு வரவேற்றது. இயற்கை வளங்களை பாதுகாக்க போராட்டம். மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை எதிர்ப்பு என பொது தளத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற கட்சி புதிய தமிழகம்.
தமிழ்ச் சமூகத்தை முற்றாக அழித்து வருகின்ற டாஸ்மாக் எனும் அரக்கனை அடியோடு ஒழிப்பதற்கு..
டாஸ்மாக் கடை மூலம் ஒரு லட்சம் கோடி ஊழல் செய்த செந்தில் பாலாஜி மற்றும் முதல்வர் மீது வழக்கு தொடுக்க அனுமதி கோரி கடந்த மே மாதம் பத்தாம் தேதி சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று ராஜ்பவனில் மேதகு ஆளுநர் திரு. ஆர். என்.ரவி அவர்களை சந்தித்து புதிய தமிழகம் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
மே 27 அனைத்து மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் அதன்பிறகு 4,000 த்திற்கும் மேற்பட்ட முறைகேடான பார்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது .
ஜூன் 15 புளியங்குடியில் டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டம் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
15.07.2023 அன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் கடை முன்பாக புதிய தமிழகம் கட்சி சார்பாக மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம் !மது இல்லாத புதிய தமிழகம் படைப்போம் !என தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி மதுவுக்கு எதிராக மக்கள் இயக்கம் கட்டியமைத்து போராடி வருகிறது .
சொந்த சமூகத்தினர்களே சாதிக் கட்சி என குறுகிய மனப்பான்மையில் எள்ளி நகையாடும் முதிர்ச்சியற்ற தன்மையை என்னவென்று சொல்வது ? எது சாதிக் கட்சி தனது சாதியை கௌரவமாக’ இசை வேளாளர்’ என தனக்குத்தானே எவ்வித குழுவும் அமைக்காமல் சாதி சான்றிதழ் வழங்கிக் கொண்ட மறைந்த கருணாநிதி செயலில் சாதி இல்லையா?
திமுக பொது கட்சியா ? அப்படி என்றால் அந்த கட்சிக்குள் சாதி பாகுபாடு இல்லையா ? தீண்டாமை இல்லையா ? உதாரணத்திற்கு மூன்று சம்பவங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் .மனதில் சாதி வன்மம் இருக்கப் போய் தானே பொன்முடி” நீ எஸ் சி தானே”” என்று இளக்காரமாக பேச முடிகிறது? “நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா? “என்று தயாநிதி மாறனால் எப்படி கேட்க முடியுது ?
திமுகவின் அமைச்சர்கள் சாதி சங்க கூட்டங்களிலும் மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டு அவர்களால் சாதியை பற்றி பகிரங்கமாக எப்படி பேச முடிகிறது ? உதாரணத்திற்கு ” நம்ம சாதிக்காரங்க எல்லாம் கூச்சப்படாம வெக்கப்படாம எங்களிடம் வாங்க உங்களுக்கான உதவியை செய்கிறோம்” என எஸ். எஸ். ஆர் ஆர் அவர்களால் சாதி வெறியோடு எப்படி பேச முடிகிறது ?
இதையெல்லாம் மதிநுட்பத்துடன் சிந்திக்க வேண்டாமா ?
புதிய தமிழகம் கட்சியின் உன்னதமான கொள்கை கோட்பாடுகள் யாதெனில் சமபங்கு, சம உரிமை, சம நீதி, சமய நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ,எனும் உயிர்ப்பான கொள்கையே அடி நாதமாக தாங்கி செயல்பட்டு வருகிறது.
இனியும் நம்மை சாதிக் கட்சி என்று சொன்னால் சொன்னவன் வாயில் நெருப்பள்ளி போட வேண்டும்.
தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டும், சாதி ஒழிப்பு பேசிக்கொண்டும், தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டும், தமிழ் சாதிகளுக்குள் பகைமையை வளர்த்துவிட்டு வந்தேறி தெலுங்கர் கூட்டம் தமிழர்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் .மீண்டும் மீண்டும் ஆள துடிக்கிறார்கள். இது எல்லாம் அரசியல் அறம் தெரிந்தவர்களுக்கு மட்டும் புரியும் . புதிய தமிழகம் கட்சி ஒன்றும் சாதாரணமாக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல.
நூற்றுக்கணக்கானோர் குண்டடிப்பட்டு இறந்தும்,
பல்லாயிரம் பேர் சிறை சென்றும், லட்சக்கணக்கானோர் உறுப்பினராகி கோடான கோடி பேரின் இதயங்களால் உருவாக்கிய இரும்பு எக்கு கோட்டை
புதிய தமிழகம் கட்சி.
இக்கட்சி தேர்தல் வெற்றித் தோல்வியை ஒருபோதும் பொறுப்படுத்தாமல் ‘பீனிக்ஸ் பறவை’போல மீண்டெழும் பேரியக்கம் .
இது வரலாற்றின் சுழற்சி மீண்டெழுந்து வா. நமக்கான ஒரே தலைமை! ஒரே கட்சி! ஒரே கொடி !ஒரே தலைவர் டாக்டர் ஐயா அவர்கள்
புதிய தமிழகம் கட்சிதான் என்று எண்ணி அனைவரும் ஒரு குடையின் கீழ் அமைப்பாய் திரள்வோம்!
ஆரோக்கியமான அரசியல் புரிவோம் !இழந்த அதிகாரத்தை மீட்டெடுப்போம் !புதிய சரித்திரம் படைப்போம் !
வாழையூர் குணா..






