சாதாரண குடிமக்களை சுட்டுக் கொல்வதா? நாகலாந்து சம்பவத்திற்கு புதிய தமிழகம் தலைவர் கண்டனம்!!

அறிக்கைகள்
s2 381 Views
  • Nagaland

    நாகலாந்து சம்பவத்திற்கு கண்டனம்!!

  • Nagaland
Published: 06 Dec 2021

Loading

நாகலாந்தில் தீவிரவாதிகள் என்று தவறாக கணித்து, 13 சாதாரண தொழிலாளர்கள் இராணுவத்தினரால் இன்று கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த செயல் கண்டனத்திற்குரியது. உயிரிழந்த அனைவரின் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், பாதுகாப்புப் படை இதுபோன்று கவனக்குறைவாக நடந்து கொண்டது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. ஆயுதபாணிகளுக்கும் நிராயுதபாணிகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் போய் விடுமா? இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட அளவில் விரைவாக விசாரணையை மேற்கொண்டு, தவறிழைத்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்துகிறேன்.

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
5/12/2021.