வெள்ளிவிழா நிறைவு சிறப்பு மாநாடு – தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA  அவர்கள் ஆற்றிய தலைமை உரை

புதிய தமிழகம் கட்சியின் 25 ஆண்டுகால வெற்றிப்பயணத்தை நினைவு கூறும் வகையில் 2022 டிசம்பர் 15 அன்று விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர் – அழகாபுரியில் சம நீதி – சமூக நீதி – சமய நீதியை வென்றெடுக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள்; ஆன்மீகப் பெரியோர்கள்; தோழமை கட்சிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அறிக்கைகள்
s2 571 Views
 • Dr Krishnasamy

  வெள்ளிவிழா நிறைவு சிறப்பு மாநாடு | டாக்டர் கிருஷ்ணசாமி

 • Silver Jubilee Special Conference
 • Dr Krishnasamy
 • Dr Krishnasamy
 • Silver Jubilee Special Conference
 • Silver Jubilee Special Conference
 • Dr Krishnasamy
 • Dr Krishnasamy
 • Dr Krishnasamy
 • புதிய தமிழகம் கட்சியின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிறைவு சிறப்பு மாநாடு

  வெள்ளிவிழா நிறைவு சிறப்பு மாநாடு | டாக்டர் கிருஷ்ணசாமி

 • Dr Krishnasamy
 • Dr Krishnasamy
 • Silver Jubilee Special Conference
 • Dr Krishnasamy
 • Dr Krishnasamy
 • Silver Jubilee Special Conference
 • Silver Jubilee Special Conference
 • Dr Krishnasamy
 • Dr Krishnasamy
 • Dr Krishnasamy
 • புதிய தமிழகம் கட்சியின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிறைவு சிறப்பு மாநாடு
 • Dr Krishnasamy
Published: 19 Dec 2022

Loading

அம்மாநாட்டில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் சியாம் கிருஷ்ணசாமி அவர்கள் எழுச்சியுரையும்விஷ்வ இந்து பரிஷத் தலைவர் திரு.வேதாந்தம் ஜி அவர்களும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் திரு.சடகோப ராமானுஜர் அவர்களும்தமிழ்நாடு விஷ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் மற்றும் நாக சக்தியம்மன் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனர் திரு. ஜெகத்க்குரு குரு பாபுஜி சுவாமி அவர்களும் ஆகியோர் ஆசியுரையும்முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் திரு நத்தம் ஆர்.விஸ்வநாதன் அவர்களும், முன்னாள் அமைச்சர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் திரு கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்களும், சட்டமன்ற உறுப்பினர் – அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் கடம்பூர் செ.ராஜூ அவர்களும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பழ கருப்பையா அவர்களும்இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் நிறுவனர்-தலைவர் திரு.தி. தேவநாதன் யாதவ் அவர்களும்தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் – தலைவர் திரு.உ.தனியரசு அவர்களும்பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு. N. R.தனபாலன் அவர்களும்பாஜக மாநில துணைத் தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களும்இந்திய ஜனநாயக கட்சி தலைவர் திரு.ரவி பச்சமுத்து அவர்களும், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில தலைவர் திரு M.A.சூசை அவர்களும்தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் & தலைவர் திரு.கே.சி.திருமாறன் ஜி அவர்களும்பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திருமதி மா. திலகபாமா அவர்களும்தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க தலைவர் திரு. A . கணேசன் அவர்களும்தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் திரு எம். தங்கராஜ் அவர்களும்தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க மாநில இளைஞரணித் தலைவர் எம். சிவலிங்கம் அவர்களும் கலந்து வாழ்த்துரையும் வழங்கினார்கள்.

நிறைவாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA  அவர்கள் ஆற்றிய தலைமை உரையின் முழு விபரம் பின்வருமாறு:

புதிய தமிழகம் கட்சியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு மாநாட்டில் திரளாகக் கலந்து கொண்டிருக்கக்கூடிய என்னுடைய அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே! சகோதரிகளே! பெரியோர்களே! இளைஞரணி நண்பர்களே!! அனைவருக்கும் என்னுடைய மாலை நேர வணக்கம்.!!

நேற்று பெய்த மழையில் இந்த மாநாட்டு இடம் நனைந்து வெள்ளக்காடாகிஉள்ளே வாகனங்கள் வரமுடியாத அளவிற்கு சேதமாகி விட்டது. இன்றும் ஒருவேளை அது போல மழை வந்திருந்தால்இந்த மாநாடு இவ்வளவு சிறப்புற நடந்திருக்குமாஎன்பது தெரியாது. இந்த மண் பெற்றெடுத்த பிள்ளைகள் நாம். எனவேஎந்தத் தாயும் எந்தப் பிள்ளைக்கும் துரோகம் இழைக்காது. அந்த வகையிலே தேவேந்திரகுல வேளாளர் மக்களை பெற்றெடுத்தது இந்த பூமி – இயற்கை – மழை. நமக்கு இன்று முற்றாக ஒரு சொட்டு மழை கூட இல்லாமல் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநாடு நடத்துவது என்று முடிவு செய்து விட்டோம். ஆனால்அதற்கான பணிகளைத் துவக்குவதற்காகத்தான் நவம்பர் மாதம் ஆம் தேதி விருதுநகரில் ஆர்ப்பாட்டம்அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்அதற்குப் பிறகு தென்காசிதிருநெல்வேலிதூத்துக்குடி என்று நாம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும்மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம். அதற்காக மதுரை வருகை தந்த போதுநவம்பர் இரண்டாம் தேதி நான் மதுரையில் கைது செய்யப்பட்டு அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டுநம்முடைய வேகம் சிறிது தடைப்பட்டது. இருந்தாலும் நவ. 3ஆம் தேதி இங்கேயே இருந்து நாம் இந்த இடத்தை தேர்வு செய்வதற்கு நாம் பல முயற்சிகள் எடுத்தோம். நவம்பர் 3-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 24-ஆம் தேதி வரை தேடித் தேடி எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும்அதற்கு எவ்வளவோ தடைகள் ஏற்பட்டுஇறுதியாக நவம்பர் 25 ஆம் தேதி தான் இந்த இடத்தையே தேர்ந்தெடுக்க முடிந்தது. எனவேஇறுதியாக 25 ஆம் தேதி நமக்கு சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்ற நில உரிமையாளர் அவர்கள் மனமுகந்து இந்த நிலத்தை மாநாடு நடத்திட வழங்கினார். அதை விட அவரின் பரந்த மனதால் தான் மாநாடு நடத்த இந்த இடத்தை நமக்கு அளிக்க முடிந்தது. செல்வராஜ் அவர்களுக்கும் உங்கள் சார்பாகவும்என் சார்பாகவும்நம்முடைய மாநாட்டு உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற ஒரு மாநாட்டை இரண்டு கட்சிகள் தான் வழக்கமாக இவ்வளவு கூட்டத்துடன் நடத்திய அனுபவம் உண்டு. இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சியிலிருந்தவர்கள்மிகவும் அனுபவம் பெற்றவர்கள். ஆனால்நமது இந்த மாநாட்டுப் பந்தல் நான்கு தினங்களில் தான் அமைக்கப்பட்டது. அதற்கு உறுதுணையாக விளங்கிய நம்முடைய கோவை சுரேஷ் அவர்களையும்அவருடைய உழைப்பையும் நாம் இங்கே அங்கீகரிக்க வேண்டும்மதிக்க வேண்டும்அவருக்கும் இந்த மாநாட்டின் வாயிலாக முன்கூட்டியே பாராட்டுக்களைச் சொல்லிவிட விரும்புகிறேன். அதேபோல இப்பொழுது 35 நிமிடங்கள் ஒரு ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. நமக்கே ஒரு பிரமிப்பு. 35 நிமிடம் எல்லோரையும் மெய்மறந்து அமர வைக்க முடியும் என்று சொன்னால் இனிமேல் திரைப்படம் எடுப்பது கூட எளிதானது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. திரைப்படம் எல்லாம் பெரிய விசயமாக கருதப்பட்டது. ஆனால் அவை ஒன்றுமே இல்லை என்று இவர்கள் எடுத்த ஆவணப் படத்தின் மூலம் தெளிவாகி விட்டது. எனவேநம்முடைய சமூக வலைதள பிரிவு சேர்ந்த சங்கர் குருசிவாவேலுசாமிசரவணன் மற்றும் அவருக்கு உற்ற துணையாக விளங்கிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல இவ்வளவு பேரும் மணி வரை உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பசியை அடக்குவதற்கு நல்ல உணவை நம்முடைய கிருபை ராஜ் அவர்களும்ராஜேந்திரன் அவர்களும்கண்ணன் அவர்களும் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களும் செய்து கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லமுன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் அவர்கள்இராஜேந்திர பாலாஜி அவர்கள்கடம்பூர் ராஜூ அவர்கள்பாபுஜி அவர்கள் மற்றும் மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் மாநாடு மிகப்பெரிய வெற்றியடைந்து விட்டது என்று மனப்பூர்வமாகப் பாராட்டுகிறார்கள். அண்ணன் பழ. கருப்பையா அவர்கள்வேதாந்தம் அவர்கள் கடல் போல ஒரு கூட்டம் எனப் பிரமித்தார்கள். எனவே இந்த மாநாடு இவ்வளவு வெற்றிகரமாக அமைவதற்கு இங்குப் பேசிய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் அவர்கள் புதிய தமிழகம் கட்சியின் மீது வைத்திருக்கக்கூடிய அன்பிற்கும்பற்றுக்கும்என்மீது வைத்திருக்கக்கூடிய பற்றுக்கும்அன்பிற்கும் நான் என்னுடைய முழுமையான நெஞ்சம் நிறைந்த நன்றியையும்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஒரு மாத காலமாக நம்முடைய அனைத்து மாவட்டச் செயலாளர்கள்ஒன்றிய செயலாளர்கள்பேரூராட்சி செயலாளர்கள்கிளை நிர்வாகிகள் உட்பட அனைவரும் 25 ஆண்டுகால சாதனையை விளக்கக் கூடிய வகையில் இத்தனை நாட்கள் இல்லாத அளவிற்குநம்முடைய கட்சியை மக்கள் மத்தியிலே சுவரெழுத்து பிரச்சாரங்கள்சுவரொட்டிகளாகதுண்டுப் பிரசுரங்களாகக் கொண்டு செல்லப்பட்டதாக இன்று மக்கள் இவ்வளவு மக்கள் பெரிய பேரெழுச்சி பெற்றுஇந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள். எனவே குக்கிராமத்தில் இருக்கக்கூடிய நம்முடைய தாய்மார்கள் முதல் இளைஞரணி நண்பர்கள் முதல் பெரியவர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை அனைவருக்குமே நான் இந்த நேரத்திலே இதயப்பூர்வமான நன்றியையும்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் வந்திருக்கும் தலைவர்கள் வாழ்த்தியதை நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்டு இருப்பீர்கள். எவரும் மேடைக்கு வந்து ஒப்புக்காக – முகஸ்துதிக்காக வாழ்த்த வந்தவர்கள் அல்ல! நம்முடைய கட்சியை உன்னிப்பாகக் கவனித்த காரணத்தினால்தான்நம்மோடு பயணித்த காலத்திலே அவர்கள் நமது நல்ல பழக்க வழக்கங்களை நேரில் கண்ட காரணத்தினால் தான்நான் சட்டமன்றத்தில் குரல் கொடுத்த அந்த நல்ல அம்சங்களின் வெளிப்பாடுகளின் காரணம் தான். ஆழ்மனதிலே இருந்து பாராட்ட இன்று இந்த மேடையிலே அவர்களை இவ்வளவு நேரம் அமர வைத்திருக்கிறது. ஏதோ அழைத்தார்கள் எனவேமேடையிலேயே நிமிடம் பேசி விட்டோம் என்று புறப்பட்டுப் போய் இருக்க முடியும். ஆனால்அவர்கள் அப்படிப் போகவில்லை. அவர்கள் நம்மோடு இரண்டற கலந்து விட்டார்கள். இதுதான் இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பல சமுதாயத்தின் தலைவர்கள்ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் ஏதாவது ஒரு சமுதாயத்தினுடைய பின்னணியை வைத்தே அரசியல் இயக்கங்களை துவங்கியிருப்பார்கள். இரண்டுமூன்று கட்சிகளைத் தவிரஅனைத்து கட்சியினுடைய வரலாறுகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால்இன்று பல்வேறு சமூக இயக்க்த்தினரும், அரசியல் கட்சியினரும் நமது மேடையிலே வந்து வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். அப்படி என்று சொன்னால் நாம் கடந்த 25 ஆண்டு காலமாகச் சரியான பாதையிலேயே பயணத்தை இருக்கிறோம் என்று பொருள். இனிமேல் எப்படிப் பயணிக்க வேண்டும். நம்முடைய பயணம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நம்முடைய புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்கள் நிர்வாகிகள் தயவு கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே ஆவணப்படத்தை காட்டினார்கள் எந்த இடத்திலேயும் ஒரு சம்பவம் கூட அரசியல் ரீதியான சம்பவங்கள் கிடையாதுஏதாவது ஒரு பிரச்சனையில் நாம் சம்பந்தப்பட்ட அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய வகையிலே ஈடுபட்ட நினைவுகள் தான் வந்திருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய பெரும்பாலான இளைஞர்கள் 25 வயதிற்கு குறைவானவர்கள். அவர்களுக்கு 1995 க்கு முன்பு தமிழகம் எவ்வாறு இருந்ததுஅவர்களது பெற்றோர்கள்மூதாதையர்கள் எப்படி இருந்தார்கள்?; எவ்வளவு இன்னல்கள் பட்டார்கள்? என்பது அவர்களுக்குத் தெரியாது. அதன் காரணமாகவே தான் இளைஞர்கள் பலர் பேர் நம்முடன் இன்னும் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதை நான் அறிகிறேன்.

1990 காலகட்டங்களில் நான் தூத்துக்குடிதிருநெல்வேலிதென்காசியில் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப் பிரயாணம் செய்கின்ற பொழுது எனக்கும் பல கிராமங்கள் தெரியாது. யாராவது ஒரு பொறுப்பாளர் இருப்பார். அந்த பொறுப்பாளர் தான் அழைத்துச் செல்வார். அவருக்கும் பெரிதாக எந்தெந்த கிராமங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தெரியாது. மாலை மணிக்கு நாங்கள் புறப்படுவோம். ”அய்யா! பத்து கிராமங்கள் என்று தான் அழைத்துச் செல்வார்கள். இரவு மணிக்கு பிறகுஇன்னும் கிராமம் இருக்கிறது என்று சொல்வார்கள்இரவு 12 மணிக்கு போல மேலும் கிராமம் என்று சொல்வார்கள்அதிகாலை ஆகிவிடும் 3 – 4 – 5 மணி ஆகிவிடும். இன்னும் கிராமங்கள் என்று சொல்வார்கள்காலை 10 மணி 11 மணி 12 மணிக்குக் கூட அய்யா இன்னும் இரண்டு கிராமம்பார்த்து விட முடியாதாஎன்று கேட்பார்கள். நான் சாப்பிட்டு இருக்க மாட்டேன்இயற்கை உபாதைகளைக் கூட கழிக்க 5 – 10 நிமிடம் கிடைத்திருக்காது. ஆனால் அடுத்த கிராமத்திலே ஒலிபெருக்கி ஒலித்துக் கொண்டிருக்கிறதுவேலைக்குக் கூட போகவில்லை என்று தெரிந்த உடனேயேசரி பரவாயில்லைநாம் சிரமப்பட்டாலும் கூட அவர்கள் 10 கிராமம் என்று சொல்லி 40 – 50 கிராமங்களைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலும் கூடஅத்தனை கிராமங்களுக்கும் சென்று இருக்கிறேன். அப்படித்தான் புதிய தமிழகம் கட்சி வளர்த்தெடுக்கப்பட்டதுநீங்களும் வார்க்கப்பட்டுள்ளீர்கள். நான் ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டால் ஒரு தாய்மார் கூட வீட்டிலேயே இருக்க மாட்டார்கள். அனைவரும் அந்த கூட்டத்திற்கு வந்து விடுவார்கள்குழந்தைகள் ஓடி வந்து விடுவார்கள்ஆண்கள் வந்துவிடுவார்கள். காரணம் அன்றைய சூழல் அப்படி இருந்தது?

இந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பதற்குஇந்த மக்களைத் தேடி வந்து ஆதரவு கரம் நீட்டுவதற்குஅவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு அன்று யாரும் இல்லைபுதிய தமிழகம் கட்சி மட்டுமே அன்று மக்களை நாடிச் சென்றது. எல்லாமே வெற்றிடமாக இருந்தது. விருதுநகர் மாவட்டம்திருச்சுழியில் நான் சுற்றுப் பிரயாணம் செய்கிறேன் என்று சொன்னால் இராமநாதபுரத்தில் கமுதிகடலாடியில் ஒலி பெருக்கி அமைத்து விடுவார்கள். ஒரு நாள்இரண்டு நாள்மூன்று நாள்நான்கு நாள் கூட தொடர்ந்து ஒலி பெருக்கி அமைத்து இருந்த நாட்கள் உண்டு. எந்த கிராமத்தையும் விட்டுவிடவில்லை. அனைத்து கிராமங்களுக்கும் சென்று தான் புதிய தமிழகம் கட்சியைத் தென்தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இன்னொரு ஒரு மிக முக்கியமான விசயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 25 வருடத்தில் எந்த ஒரு சூழலிலும் என்னுடைய நலனுக்காகவோகுடும்ப நலனுக்காகவோ எந்தக் கொள்கையிலும்எடுத்துக் கொண்ட கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையில் ஒரே ஒரு வார்த்தை மாறி இருந்தால் போதும் தேயிலைத் தோட்டத் தொழில் அதிபர்கள் அனைவரும் கோடி கோடியாகக் கொண்டு வந்து கொட்டி இருப்பார்கள். ஆனால்வரலாற்றில் நாம் அன்று யாருக்கும் தெரியாது என்று அந்த தவற்றைச் செய்து விடலாம். ஆனால் வரலாற்றுக்குத் தெரியாமல் போய் விடாது. என்றாவது ஒருநாள் தெரிந்துவிடும். அதுதான் வரலாறு. அதன் காரணமாகத்தான் நான் எந்த ஒரு பிரச்சனையை தொடுவது என்று சொன்னாலும்அந்த பிரச்சனையில் தலையிடலாமாவேண்டாமாதலையிட்டால் அதனால் மக்களுக்கு எவ்வளவு நன்மை ஏற்படும்இதை நம்மால் தீர்வு காண முடியுமாமுடியாதாஎன்பதை எல்லாம் ஆய்வு செய்துதான்நான் தலையிட்டு அந்த பிரச்சனைகளில் கருத்தைப் தெரிவித்து இருக்கிறேன். இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் உண்டு.

1975ஆம் ஆண்டு நான் மதுரை மருத்துவக் கல்லூரியில் அப்போது என்னை நெல்லை மருத்துவக் கல்லூரியிலிருந்து மாற்றம் செய்துமதுரை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். 75ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பீகாரில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு நிதி நிவாரண நிதி திரட்டியதற்காக இந்திராகாந்தி பரிசளித்தார். 25ஆம் தேதி அக்டோபர் மாதம் நான் மதுரை மருத்துவக் கல்லூரியில் வந்து சேர்ந்து விட்டேன். 76 ஆண்டு ஜூலை மாதம் நான் மிசாவிலே கைது செய்யப்பட்டேன். எதற்காக என்று சொன்னால் உங்களில் பல பேருக்கு மிசா என்றால் என்னவென்றே தெரியாத மிசா என்றால் Maintenance of Internal Security Act என்று தடா சட்டம் – பொடா சட்டத்தைப் போல, 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி இந்தியாவில் ஒரு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது இந்தியாவிலிருந்த அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப்பொழுது மாணவ பருவத்திலே மாணவமாணவிகளை எல்லாம் திரட்டி மாணவர்களிடத்தில் ஒரு அமைப்பை வைத்து இருந்த காரணத்தினால்வடக்கு மாநிலங்களில் கட்டாய கருத்தடைகள் செய்யப்பட்டது என்ற கருத்தைக் கேட்டறிந்துகட்டாய கருத்தடை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி நோட்டீஸ் விநியோகம் செய்ததை அடிப்படையாக வைத்து என்னை கைது செய்துஎன்னை உள்ளே வைத்தார்கள்.

நான் ஜூலை மாதம் உள்ளே சென்றேன். என்னைப் பார்ப்பதற்காக என்னுடைய தாயார்தந்தைஅண்ணன்தங்கையர் அனைவரும் வந்திருந்தார்கள். நான் அப்பொழுது அவர்களை இரண்டு மாதகாலம் பார்க்கவே இல்லைபார்ப்பதைத் தவிர்த்து விட்டேன். அதற்குப் பிறகுஜெயிலர் ஒருவர் இருந்தார்அவர் என்னை அழைத்துஇப்படி உன்னுடைய தாய் இரண்டு மாத காலமாகத் தினமும் வந்து சிறை வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்க்க மறுக்கும் நிலை ஏன் என்று கேட்டார். நான் அவரிடத்தில் ”இந்த நாடு இப்பொழுது ஒரு மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றது 1947. ஆனால் அந்த சுதந்திரத்தை இழந்து இந்த 70 கோடி மக்களும் ஒரு மிகப் பெரிய ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறார்கள். எப்பொழுது இந்தியாவில் இருக்கக்கூடிய 70 கோடி மக்களுக்கும் சுதந்திரம் வருகிறதோஅன்று தான் எனக்கும் சுதந்திரம்எனக்கும் விடுதலை”. எனவே இன்று ஒரு தாயைப் பார்க்கப் போனால்நான் தனிப்பட்ட ஒரு தாயின் மீது பற்று கொண்டவன் ஆகிவிடும். என் இந்திய மக்களுக்கு விடுதலை கிடைத்ததாஅப்புறம் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். ஆனால்அவர் தொடர்ந்து ஒரு வார காலம் பேசி தாயை அழைத்து வந்து பார்க்க வைத்தார். அப்போது தாய் கட்டிப்பிடித்து அழுத போதுஅதற்குப் பிறகு 10 நிமிடங்கள் சொன்னார் ”இந்த லட்சியங்களைப் பற்றி பேசிய பொழுது ஒரு முக்கியமான விசயம் சொன்னார். நீ உறுதியாக இருந்திடல் வேண்டும். அதற்குப் பிறகு தான்மற்றவர்களிடத்தில் சொல்ல வேண்டும். அந்த வகையிலே நான் சிறைக்கு வந்ததுமக்களுக்காக தானாநான் உறுதியாக இருக்கிறாயாமக்களுக்குத்தானா? இது மட்டுமல்லஇனிமேல் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த பிரச்சனைகளுக்கு செல்வதற்கு முன்பாக நமக்கு நாம் உண்மையாக இருந்திட வேண்டும்” என்பதுதான் எனக்கு தாய் கொடுத்த அறிவுரை. அன்றிலிருந்து இன்று வரையிலும் அது கொடியங்குளம் நிகழ்ச்சி என்றாலும் சரிமாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினை என்றாலும்சட்டமன்ற பிரச்சினை என்றாலும் உண்மையாகத்தான் இருந்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். இன்று முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இந்த மேடையிலே இருக்கிறார்கள்.

2011 ஆம் ஆண்டு மே மாதம் அதிமுக கூட்டணியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளே சென்றேன். பரமக்குடியில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அதிலேயே பேர் மரணம் எழுதிவிட்டார்கள். அதையெல்லாம் இங்கே தம்பி தனியரசு சுட்டிக் காட்டுவார் என்று இருந்தேன். அந்த கலவரத்திற்கும் புதிய தமிழகம் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அது யாராலோஎதற்காகவோ உருவாக்கப்பட்டது. சட்டமன்றத்தில் அன்று நான் அமைதியாக இருந்திருந்தால்அடுத்த ஐந்து ஆண்டு காலமும் அதிமுகவோடும்அன்றைய முதல்வர் அவர்களுடன் மிகவும் சுமுகமான உறவுடன் சென்றிருக்க முடியும். ஆளும் கட்சியோடு இருக்கக்கூடிய நல்லுறவோடு இருந்தால் எவ்வளவு நற்காரியங்களை பெறமுடியும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆளும் கட்சியோடு நல்ல உறவு இருந்தால் எந்த அமைச்சரிடம் சென்றாலும் நம்மோடு இருக்கிறார் என்று அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொடுப்பார்கள். முதல் வருடத்திலேயே உறவு சரியாக இல்லை என்று சொன்னால், அமைச்சர்களை அவ்வளவு எளிதாக அணுக முடியாது. எனினும், என்னுடைய மனசாட்சி உறுத்தியது. அங்கே எனது இடது பக்கம் தனியரசுசரத்குமார்கதிரவன்செ.கு. தமிழரசன் எல்லோரும் அமர்ந்து இருந்தார்கள். அந்த பிரச்சனையைச் சட்டமன்றத்தில் எழுப்பிய பொழுது தனியரசு ”இந்த பிரச்சனையை எப்படி அணுகப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அந்த பிரச்சனையில் இறந்தவர்கள் புதிய தமிழகம் கட்சியின் போராட்டத்தில் இறந்தவர்கள் அல்ல. ஆனால் இறந்தவர்கள் எனது தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நேரத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வெளிநடப்பு செய்யாமல் இருந்தால் இன்று இல்லை என்றாலும்வரலாற்றில் என்றாவது ஒருநாள் நம்மையும் பார்த்து கேள்வி கேட்க நேரிடும் என்ற அடிப்படையில்தான் அன்று அதிமுகவை எதிர்த்து வெளிநடப்பு செய்தேன். எனவே நான் கடந்த 25 வருடத்தில் உங்களுக்கு 100 சதம் அல்ல, 1000 சதவீதம் உண்மையாக இருந்திருக்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனவேஒரு அரசியல் கட்சியை நடத்துவதில் தலைவருக்கு மட்டுமல்லகட்சியினுடைய நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த உறுதியும்பொறுப்பும்கடமையும் கண்டிப்பாக வேண்டும். இனிமேல் ஒரு கொடியங்குளம் நடக்கப் போவது கிடையாதுஇனிமேல் ஒரு மாஞ்சோலை போராட்டம் நடக்கப் போவது கிடையாதுஇனிமேல் தமிழகத்தில் கிராமத்தில் இரட்டை டம்ளர் முறைகள் வரப்போவது கிடையாதுஇரட்டை சுடுகாடுகள் வரப்போவது கிடையாதுஇனிமே கண்ட தேவி தேர் வடம் பிடித்து இழுக்க நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதுபோன்ற பிரச்சினைகளை எல்லாம் தமிழ்நாட்டிலே அன்று தலைதூக்கி இருந்தது. அன்று இருந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் 25 வருடத்தில் நாம் தீர்வு கண்டு இருக்கிறோம் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனி எல்லாம் அந்த வரலாறுகள் எல்லாம் திரும்பி வராது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்நான் கிராமந்தோறும் செல்லுகின்ற போதெல்லாம் தாய்மார்கள்இளைஞர்கள்பெரியவர்கள் அனைவரும் ”அய்யா நம்மை இந்த எஸ்.சி பட்டியலிலிருந்து நீக்க மாட்டீர்களா? பகுதிக்கு ஒரிருவர் மருத்துவர்ஆட்சியர்காவல்துறை அதிகாரி என உயர்ந்தால் மட்டும் போதாது. அனைவரும் வாழ்க்கையில் உயர வேண்டும். தேவேந்திர குல வேளாளர்கள் அனைவரையும் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று ஏதும் படிக்காதவ மக்கள் வேண்டிக் கொண்டனர். ஏதாவது ஒரு சிறு தொழில் செய்து பிழைக்கக் கூட இந்த எஸ்.சி என்ற கறை தடையாக இருக்கின்ற காரணத்தினால் தான் நான் எஸ்.சி பட்டியலிலிருந்து இந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை நீக்கவேண்டும்” என்று குரல் கொடுத்தேன். அதன் விளைவாகவே தேவேந்திரகுல வேளாலர் அரசாணைக் கிடைத்தது.

ன்று நான் அதற்காகவும் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரோடு நாம் கூட்டணியிலேயே 2021-ல் இருக்க முடியவில்லை. கூட்டணி என்பது வேறு. வரலாற்றிலே அரசியல் ரீதியாக சில காரணங்களால் நாம் கூட்டணி சேரலாம்சேராமல் இருக்கலாம். ஆனால்ஒரு பெரிய தமிழ்ப் புலவர் அல்லது தமிழ் அறிஞர் என்று சொல்லக்கூடியவர்கள் புரிந்துகொள்ளாததை ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரிந்து கொண்டு வெறும் வார்த்தையாக இல்லாமல்எழுத்தாக்கிமத்திய அரசோடு துணை நின்று பள்ளர்குடும்பர்காலாடிபண்ணாடிமூப்பர்தேவேந்திரகுலத்தார்கடையர் போன்ற ஏழு பேர்களில் அழைக்கக் கூடியவர்கள் ’தேவேந்திரகுல வேளாளர்’ என்ற ஒற்றைப் பெயர் மாற்றம் உருவாகியது. ஆனால்நாம் வைத்த கோரிக்கை அதுமட்டுமல்ல. எஸ்.சி பட்டியலிலிருந்து தேவேந்திரகுல வேளாளர்களை வெளியேற்ற வேண்டும் என்பதும் தான். அதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அரசியலுக்காகப் பேசுகிறார்கள் என்று நினைத்தார்களே தவிரஇது தேவேந்திர குல வேளாளர் மக்களுடைய மனதில் ஆழ் மனதில் இருக்கக்கூடிய கோரிக்கை என்பதைப் பல பேர் புரியவே இல்லைஅதற்கும் முட்டுக்கட்டை போட்டார்கள். ஐ.ஏ.எஸ்ஐ.பி.எஸ் படித்தவர்கள்உயர் அதிகாரிகள்அரசு ஊழியர்கள் என படித்து பயன் பெற்றவர்கள் முட்டுக் கொடுத்தார்கள். நாம் ஒன்றும் இப்பொழுது இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளின் பதவிகளை பறிக்கப் போவதில்லை. தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்சி பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டாலும்அவர்களுடைய பதவி பறி போகாது. இருந்தாலும்கூட அவர்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் போய்விடும் என்று சுயநலமாகப் பார்த்தார்களேதவிர சமூக பற்றோடு அவர்கள் அணுகவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் முழுமையாக ஆதரிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அதுதான். ஒரே ஒரு வாக்குறுதியைத் தான் கேட்டேன். அது பாஜக இடத்திலும் சரிஅதிமுக இடத்திலும் சரி ”இப்பொழுது பெயரை மாற்றிக் கொடுத்திருக்கிறோம்வரக்கூடிய காலகட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து நீக்குவோம்” என்று சொல்லியிருந்தால், ”எங்களுக்கு சட்டமன்றத்திலே போட்டியிட வாய்ப்பே வேண்டாம்” என்று கண்ணை மூடிக் கொண்டு அக்கூட்டணிக்கு ஆதரவளித்து இருப்பேன். அன்று அந்த நிலை உருவாகி இருந்தால்இன்று இங்கு அமர்ந்து இருக்கக்கூடியவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களா மட்டுமல்ல, அமைச்சர்களாகவும் இருந்திருப்பீர்கள். மாடல் ஆட்சி மாற்றம் நடந்து இருக்காது. மிக நல்ல காரியத்தைச் செய்து கொடுத்தும் கூடஅதன் பலனை அறுவடை செய்யவில்லை. ஓராண்டுஈராண்டு அல்லநான் 25 ஆண்டுகாலம் பேசியிருக்கிறேன். 1991 இல் இருந்து வெளிப்படையாகப் போராடுகிறேன். பொதுவாழ்வுக்கு வந்த காலத்திலிருந்தே தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் எஸ்.சி பட்டியில் இருந்து வெளியேறினால் தான்முழு விடுதலை பெற்ற சமுதாயமாக இருக்க முடியும். அது மட்டும் நடந்திருந்தால்தென் தமிழகத்தில் மட்டுமல்ல, 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்களின் ஒரு வாக்கு கூட எதிரணிக்குச் சென்றிருக்காது. இருந்தாலும் இன்னும் காலம் இருக்கிறது. நம்முடைய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாகஉறுதியாக இருந்தால் தான் ஒரு லட்சியத்தை அடைய முடியும். தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கு எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள் என்பது வேறு. கூட்டங்களுக்குக் கூட பணம் கொடுக்கிறார்கள் என்பது வேறு. ஆனால்புதிய தமிழகம் கட்சி அவற்றை ஆதரிக்கக் கூடிய கட்சி அல்லஒரு தெளிவான லட்சியத்தைஇன்று இருக்கக்கூடிய வாழ்நிலையில் இருந்து ஒரு படிக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடுஉங்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் தலையாய லட்சியம் ஆகும். தமிழ் சமுதாயத்தில் இன்று ஒரே ஒரு பிரிவினர் மட்டும் தான் புதிய பணக்காரர்கள் ஆகி வருகிறார்கள். அக்காலங்களில் இருந்த பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். 1971இல் கோவையிலே நூற்றுக்கு மேற்பட்ட நூற்பாலைகள் இருந்தது. நூற்பாலையில் வேலை செய்யக்கூடிய அந்தத் தொழிலாளர்களுக்குத் தான் அதிகமான மரியாதை அவருக்குத்தான்போட்டிப் போட்டுக்கொண்டு பெண் கொடுப்பார்கள். தீபாவளி என்றால் அவர்களிடத்தில் தான் 5000, 10000 என பணம் புழங்கும். அப்படியெல்லாம் கொடிகட்டிப் பறந்த நூற்பாலைகள்காணாமல் போய்விட்டன. இப்பொழுது ஒரு புதிய வர்க்கம் ஐ.டி என்ற ஒரு வர்க்கம் தான் புதிதாக வளர்ந்து வருகிறார்கள்.

ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பெரிய வசதியிருந்தவர்கள் எல்லாம் அடிபட்டு விட்டார்கள். இது தேவேந்திரகுல வேளாளர்கள் அல்லது நெசவாளர்கள் இருந்தாலும்விஸ்வர் கர்மா சமூகமாக இருந்தாலும்அவர் நாடாராக இருந்தாலும்யாதவராக இருந்தாலும்தேவராக இருந்தாலும்எந்த சமுதாயமாக இருந்தாலும் அவைகளெல்லாம் கீழே விழுந்து கிடக்கிறன்றன. 10 முதல் 30 சதவீதம் மக்கள் மட்டுமே வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் கார் வைத்திருக்கிறார்கள். நம்முடைய புதிய தமிழகம் கட்சி 25 ஆண்டுக்காலம் நீங்கள் உங்களுக்கு பட்ட அடிக்காகஉங்களுக்காக போராடி இருக்கிறீர்கள். ஆனால் இன்று 25 ஆண்டுகாலம் நிறைவுற்று விட்டது.

அடுத்து 26வது ஆண்டிளே எடுத்து வைக்கிறோம். இந்த நிலையில் மீண்டும் சமுதாய பிரச்சனையை பேசுவதற்கோஅந்த ஊரில் ஒரு சம்பவம் நடந்து விட்டதுஇந்த ஊரில் ஒரு சம்பவ நடந்து விட்டது என்று பேசிக்கொண்டு இருப்பதற்கு நேரம் இல்லை. உகந்த காலமும் இல்லை. இப்பொழுதே நமக்கு மிகப்பெரிய தலையாய பிரச்சனை – லட்சியம் – கோரிக்கை சித்தாந்த ரீதியாக வந்து இருக்கிறது. இனி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமே ஒரு விடிவு காலத்தை உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பு புதிய தமிழகம் கட்சியினுடைய தொண்டர்கள் அனைவருடைய தலையிலும் சுமத்தப்பட்டு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அதைத்தான் பல பேர் பேசினார்கள். அதைத்தான் அண்ணன் பழ.கருப்பையா அவர்கள் கூடச் சொன்னார்கள். ஒரு சமூகத்தினுடைய தொண்டனுக்கு சில நேரங்களில் சில பிரச்சனைகள் வரலாம். எந்த அரசியல் கட்சிக்கு வராமல் இருக்கிறது. காந்தி இந்தியச் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்அவருக்கு பிரச்சினை வரவில்லையாஅம்பேத்கர் அவர்கள் இந்த நாட்டினுடைய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபட்டார்அவருக்கு தொல்லைகள் வரவில்லையாதுன்பங்கள் வரவில்லையாபுரட்சியின் மூலமாக இந்த நாட்டை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜப்பான்ஜெர்மனி சென்று இந்திய தேசியப் படையைக் கட்டிய சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்குப் பிரச்சனைகள் வரவில்லையாஇந்த நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக வ.உ.சி அவர்களுக்குச் சொத்து சுகம் இல்லாமல் இருந்து செக்கு இழுக்க வேண்டிய சூழல் வரவில்லையாபாரதியார் கவிதை பாடியதற்காக ஊரை விட்டு நாடு நாடாக ஓட வேண்டிய அவசியம் வரவில்லையாஎனவே யாருக்கு பிரச்சனை வரவில்லை. எல்லோருக்கும் பிரச்சனை வந்துள்ளது. ஆனால்அன்று இருந்த பிரச்சனைகள் இன்று அல்ல. இனிமேல் காலகட்டம் மாறிவிட்டது. வேறு வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். வாட்ஸ்–அப்பேஸ்புக் மூலமாக எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியாது. எனவே புதிய தமிழகத்தினுடைய தொண்டர்கள்நம்முடைய நிர்வாகிகள் நமக்கு ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்துநாம் தலைமை ஏற்று இந்த தமிழ் சமுதாயத்திற்குப் பொறுப்புணர்வுடன் உழைக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

இந்த மாநாடு இன்னும் கூட சிறப்பாகப் பண்ணியிருக்க முடியும். நான் இந்த மாநாடு அறிவித்தபோது உங்களிடத்தில் எல்லாம் யாரிடத்திலும் எக்காரணம் கொண்டும் நிதி வசூல் செய்யக்கூடாது. நம்முடைய கட்சிக்காரர்களே இந்த மாநாட்டை நிதி திரட்டி நடத்த வேண்டும் என்றுதான் 450 பேர் கொண்ட குழுவை உருவாக்கினோம். அதேபோல மாநாட்டு வரவேற்புக் குழு அறிவித்தோம். மாவட்டஒன்றியநகரச் செயலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை. அதேபோல உறுப்பினராக இருக்கக் கூடியவர்களுக்கு ஒரு தொகை குறிப்பிட்டோம். ஆனால்நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்றும் இல்லாத அளவில் சுவர் எழுத்து விளம்பரங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள். கிராமம் தோறும் வாகனங்களைப் பிடித்து வர வேண்டிய சுமை இருக்கிறது என்பது தெரியும். இருந்தாலும் கூட நம்முடைய கஷ்டத்தை நாமே தீர்ப்பதில் இருக்கக்கூடிய பெருமையும்இன்பமும் வேறு எதுவும் இருக்க முடியாது. இப்பொழுது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நீங்கள் பல இடத்தில் சென்றீர்கள். நாம் ஒரு சில லட்சங்களை திரட்டுவதற்கு எவ்வளவு கடினப்பட்டோம் என்பது தாங்கள் நன்றாக அறிந்தோம். நாம் நாம் ஒரு லட்சம் எதிர்பார்த்தோம்பத்தாயிரம் கொடுத்து இருந்தாலும் சரி. பத்தாயிரம் ரூபாய் எதிர்பார்த்து ஆயிரம் கொடுத்து இருந்தாலும் சரி. அவர்கள் அனைவருக்குமே மாநாடு முடிந்தவுடன் தொண்டர்கள் சென்று நன்றி தெரிவிக்க வேண்டும். நான் ஏன் இந்த சமயத்தில் சொல்கிறேன் என்றால் புதிய தமிழகம் கட்சிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும்கட்சிகளுக்கும்சமூக அமைப்புகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். புதிய தமிழகம் கட்சியைப் பார்த்தால் புலியைப் பார்த்ததுபோலசிங்கத்தைப் பார்த்தது போல கரடியைப் பார்த்தது போலஒரு பார்வை இடைப்பட்ட காலத்தில் வந்திருக்கிறது. அதையெல்லாம் இன்றோடு துடைத்து எறியப்பட்டு விட்டது. இன்று பல்வேறு சமூக அமைப்பினரும்அரசியல் கட்சியினரும் நம் மேடையேறி இருக்கிறார்கள். எனவேஅந்த பொறுப்பை உணர்ந்து நம்முடைய நிர்வாகிகள் அனைவருமே எப்பட்டி அரசியலில் பயணிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் பயணம் என்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சி – அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்றே இருக்கும். நமக்கு இப்பொழுது 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 2026 சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று இனி வரக்கூடிய காலகட்டங்களில் நம்முடைய சிவப்பு – பச்சை வர்ணக் கொடியும் டெல்லிக் கோட்டையிலும், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் பறந்திட வேண்டும்நாமும் ஆட்சி – அதிகாரத்திலே பங்கு பெற வேண்டும். எத்தனை ஆண்டுக் காலத்திற்கு வெறும் சட்டமன்ற உறுப்பினர்களையே இலக்குகாக கொண்டு செயல்படுவது? எப்பொழுதுமே ஒரு கலவையில் தான் ஒரு நல்லது உருவாக்க முடியும்பாலை தனியாக குடிப்பதற்கு பதிலாக சர்க்கரை சேர்த்தால் சுவை வேறு. பாலை தனியாக சாப்பிடுவதற்கும் பால்கோவா செய்து சாப்பிடுவதற்கும் சுவை நன்றாக இருக்கும். வெறும் கோதுமையை சாப்பிடுவதற்கு பதிலாக அல்வா செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அது போல தான் இனிமேல் தமிழகத்திலே நம்முடைய நோக்கம் எல்லாம் இனிமேல் இந்த ஜாதி மோதல்அந்த ஜாதி சண்டைஇந்த சாதியோடு சண்டை என்பதை எல்லாம் நீக்கி விட்டுதமிழ்நாட்டில் உருப்பெற்றுள்ள திராவிட மாடல் சித்தாந்தத்தைஅதாவது தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தனக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சித்தாந்தத்தைத் தகர்த்தெறிய வேண்டும். அக்குடும்பம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக 505 வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அதில் ஏதாவது ஒரு வாக்குறுதி நிறைவேறப் பட்டிருக்கிறதாஇல்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்களே ரத்தாகி விட்டதாடாக்டர் கிருஷ்ணசாமி தான் நீட் தேர்வை ஆதரிக்கிறார் என்று சொன்னார்கள். நீங்கள் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறீர்களே! அனைவரும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாததை; 120க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுகூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியிலே இருந்து கொண்டு இரு முறை நீட் தேர்வை ரத்து செய்யத் தீர்மானம் நிறைவேற்றிய உங்களால் செய்ய முடியவில்லை. ஆனால்ஒரு கிருஷ்ணசாமியால் நீட் தேர்வை நிலைநிறுத்த முடியும் என்பது பெருமை தானே! நிச்சயமாக இவர்களால் ஒரு காலத்திலும் நீட் தேர்வை இரத்துச் செய்ய முடியாது. நீட் தேர்வு வந்தவுடன் என்ன குறைந்து விட்டது. ஒரே ஒரு குறை இருந்தது. நீட்தேர்வு வருவதற்கு முன்புகிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்கள் அதிக பேர் மருத்துவம்பொறியியல். வேளாண்மை கல்லூரிகளுக்கு செல்ல முடியாத சூழல் இருந்தது. அந்த குறைபாட்டை 7. 5 சதவீத தனி இட ஒதுக்கீடு கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அந்த குறையை நிவர்த்தி செய்திருக்கிறார். அதற்குப் பிறகு நீட் தேர்வால் எவ்வித பிரச்சனையும் இல்லை. மீண்டும் அதையே ஏன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?

ஆட்சிக்கு வந்தவுடன்மாதத்திற்கு ஒருமுறை எடுக்கக்கூடிய மின்சார கட்டண அளவீட்டை மாதத்திற்கு ஒரு முறை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். அந்த கோரிக்கை என்ன ஆயிற்றுஅதற்கு மாறாக மின்சார கட்டணத்தை இரண்டு மடங்காக்கினார்கள். கடந்த ஒருவாரத்திற்கு முன்பாக என்னிடத்தில் கோவைசூலூர்சோமனூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 20க்கு மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். இன்று இருக்கக்கூடிய உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் குறைக்கப்பட வில்லை என்றால் ஏறக்குறைய 5 – 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சொன்னார்கள். சோமனூர்பல்லடம்ஈரோடு பகுதிகளில் இருக்கக் கூடிய விசைத்தறி ஆலைகள் மூடப்படும் நிலை இருக்கிறது என்று சொன்னார்கள். இந்த விசைத்தறி தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை இன்றைய ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்’ ஆட்சியாளர்களுக்குச் செல்லவில்லையா?

ஒரு பக்கம் சகோதரிஒரு பக்கம் மகன் ஊர் ஊராக சென்றுஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று சொன்னார்களேமதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கிறதாஇதுவரையிலும் சாலையிலே பால் கொண்டு போகும் வண்டி வந்தால் அவசரம் என்று போகும். மருத்துவ ஆம்புலன்ஸ் அவசரம் என்று போகும். ஆனால்இன்று அவற்றிற்கெல்லாம் அவசரமில்லை. ”டாஸ்மாக் வாகனங்களுக்கு தான் அவசரம்” என்று போஸ்டர் ஒட்டி செல்கிறது. இதுதான் இன்றைய ஆட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றம். ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை வந்து சேரவில்லைமுதியோர்களுக்கான பென்சன் தொலை 1000 லிருந்து 1500 ஆக உயரும் என்று சொன்னார்கள். அதுவும் போய் சேரவில்லைபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவருடைய சம்பள உயர்வுபழைய பென்சன் முறை வரும் என்று கூறினார்கள்வரவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறை அமலாக்கப்படும் என்று சொன்னார்கள் கேட்டால் நிதி இல்லை என்று ஒரே கூப்பாடு. ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல்டீசல் விலையைக் குறைப்பதற்கு ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அதைப் பற்றி வாய் திறக்க இன்று ஆளில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் தமிழக மக்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். சாலைகள் போடாமல் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் தொடங்கப்பட்ட திட்டங்களை இப்போது அமலுக்கு வரும்போது திறந்து வைத்து பெருமை கொள்கிறார்கள். புதிய திட்டங்கள் அப்பா பெயரில் வருகிறதுபேனா வருகிறதுநூலகம் வருகிறது. கடலுக்குள்ளே எப்படி எழுத முடியும் என்பது தெரியவில்லை. 136 அடிக்குப் பேனா ஒரு புயல் வந்தால் அந்தப் பேனா நிற்குமாநிற்காதாஎன்று தெரியவில்லை. ஆனால் அதற்கு நூறு கோடி ரூபாய்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட, தமிழக மக்கள் ஏமார்ந்து இருக்கிறார்கள்பெண்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். நகைக்கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும்கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். செய்யவில்லை. இப்படி வஞ்சிக்கப்பட்ட எல்லா மக்களையும் புதிய தமிழகம் கட்சியினர் வீடுவீடாக சென்று 2021 திராவிட மாடல் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டதை எடுத்துரைக்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றிடவும்; 2026-ல் ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லக்கூடிய திராவிட மாடல் என்ன என்பதை அம்பலப்படுத்த வேண்டும். இந்த மைக்கை ஒரு முன்மாதிரி என்று சொன்னால் எல்லா இடத்திலும் இதே போல ஒலி எழுப்ப வேண்டும். இங்கே பேசினாலும் சரிஸ்ரீவில்லிப்புத்தூர் நகரத்துக்குள் பேசினாலும் சரிவிருதுநகரில் பேசினாலும்மதுரையில் பேசினாலும் அல்லது வேறு நாட்டிற்கு கொண்டு சென்றாலும் இந்த மாதிரி பேச வேண்டும் அதுதான் மாடல். அப்படி என்ன மாடல் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்அதுபோல என்ன மாடல். இட ஒதுக்கீடு இன்று வந்தது அல்ல. மஹாராஷ்ட்ரத்திலே இட ஒதுக்கீட்டுக்காக ஜோதிபா புலே 1920 முன்பாகவே போராடியிருக்கிறார்; இட ஒதுக்கீடும் பெற்று இருக்கிறார். ஆங்கிலேயர்கள் அவர்களாகவே முன்வந்து சீக்கியர்களுக்குஇஸ்லாமியர்களுக்குகிறித்தவர்களுக்குபார்சிகளுக்குக் கொடுத்து இருக்கிறார்கள். அதை 50 வருடத்திற்கு பின்பு வந்தவர்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும். திராவிட மாடல் ஆட்சி எனும் நம்மை ஏமாற்றும் பொய்யும்பித்தலாட்டமுமாக உள்ளது. கேட்டால் பெரியாருடைய பெயரைப் பயன்படுத்துகிறார்கள். எந்த ஒரு தத்துவமும் எல்லா காலத்திலும் உதவாது. பெரியாருடைய தத்துவம், அண்ணாவின் கருத்துக்கள் அன்றைய சூழலில் வேண்டும் என்றால் உதவி இருக்கலாமே தவிரஇன்று தமிழகத்தில் 7 – 8 கோடி மக்களுக்கு வறுமையைப் போக்கவேலையற்ற இளைஞர்களுக்கு வேலையைக் கொடுக்கதொழிலாளர்களுக்கு தொழில்களை உருவாக்கி கொள்ள அதெல்லாம் உதவாது. இன்று அவசர அவசரமாக குடும்ப வாரிசுக்கு முடிசூட்டப் படுகிறது. இது எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காக நடைபெறுகிறது. நம்முடைய தொண்டர்கள் ஒரு விஷயத்தை வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த 25 வருடமாக உங்களுக்கு நடைமுறையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக போராடியிருக்கிறோம். இனி தமிழ்நாட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்காகப் போராட ஆயத்தமாகிக் கொள்ள வேண்டும் என்பது தான் இந்த 25 ஆம் ஆண்டு மாநாட்டின் நிறைவு விழாவில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இரண்டு பெரிய கட்சிகளை தாண்டி என்று 25வது ஆண்டு விழாவை கொண்டாடியது என்றால் அது நம்முடைய கட்சிதான். காரணம் நாம் என்ன கொள்கை எடுத்துக்கொண்டோமோஅந்த கொள்கையில் உண்மையாக உறுதியாக நின்றது. இந்த கட்சி 50 ஆண்டுகளை நிறைவு செய்ய வேண்டும்; 75 ஆண்டு காலம் ,100 ஆண்டு விழாவை நிறைவு செய்ய வேண்டும். அதனை நானே இருந்து தான் 50, 75 ஆம் ஆண்டு விழா நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் 25 வருடத்திற்கு முன்புமண்ணுரிமைமனித உரிமைவாழ்வுரிமை என்ற லட்சியங்களை உள்ளடக்கிஇந்த மண்ணிலே பிறக்கக்கூடிய ஒவ்வொருவரும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். அதனை நல்ல முறையில் வாழ்வதற்கான வசதிகளை அரசுகள் செய்திடல் வேண்டும். பிறப்பிலே ஏழையாகப் பிறந்தாலும் கூட வளர்ப்பிலே வசதி படைத்தவனாக மாற்றப்படவேண்டும்பிறப்பிலேயே கல்வி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் அவனுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்பிறப்பிலே அவன் விளிம்பு நிலை சமூகத்தில் பிறந்து இருந்தாலும் அவன் மத்திய நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள். எனவே, equality and equity சமூக நீதிசமத்துவம்சமய நீதி என்ற அடிப்படையில் எல்லோருக்கும் எல்லாம் சென்றடைய வேண்டும் என்ற உயரிய லட்சியம் தான் பொதுவுடைமைபொது உரிமை இலட்சியம். அந்த லட்சியத்தை எல்லோருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற அந்த உயர்ந்த எண்ணத்தோடு புதிய தமிழகம் கட்சியினர் செயலாற்ற வேண்டும். நம்முடைய நலனை மட்டும் பார்த்தால் போதாது. நீங்கள் தற்போது ஆவணப்படம் பார்த்ததில் காட்சிப்படுத்தப்பட்டவை எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். இன்று நடப்பவைகள் அல்லஇன்று நடப்பவைகள் என்னஅரசியல் சுரண்டல்கள்தமிழ்நாட்டில் ஒரே ஒரு குடும்பம் எத்தனை பொய்களை 505 வாக்குறுதிகளைக் கொடுத்துதமிழ் சமுதாயத்திற்காகப் பாடுபட்டதாக கூறி கடைசியில் ஒரு கட்சி மட்டும் இப்பொழுது ஒட்டுமொத்த ஆட்சி – அதிகாரத்தையும் ஒரு குடும்பம் தன்னை வளர்த்துக்கொள்ள பயன்படுத்துகிறது. ரியல் எஸ்டேட் தொழிலை ஜி-ஸ்கொயர் தவிர எவரும் போட முடியவில்லை. சினிமா படம் எடுத்தால் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தவிர எவரும் தாண்டிச் செல்ல முடியவில்லை. ஆட்சியிலே எல்லாம் சமையலறைக்குள் மருமகன்மகன்மனைவி என இவர்களுடைய உத்தரவிலே நடைபெறுகிறது. காவல்துறை அதிகாரி நியமனம்மாவட்ட ஆட்சியர் நியமனம் என அனைத்து சமையலறை உள்ளுக்குள்ளேயே நடக்கிறது. இதற்காகவா காந்தி போராடினார்நேரு போராடினார்சுபாஷ் சந்திரபோஸ் போராடினார்இதற்காகவா எல்லோரும் போராடினார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களால் ஒரே குடும்பம் தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்காகவா அரசியல் சாசனம் கொண்டுவரப்பட்டது?

ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சியில் இருக்க; ஒரு குடும்பத்தால் மட்டுமே முன்மொழியப்படக்கூடிய அவர்களின் திராவிட மாடல் என்ற சித்தாந்தம் பித்தலாட்டமும் புரட்டும் கொண்டது. அதிலிருந்து தமிழக மக்களை விடுவிக்க புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய இன்றைய பணி என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஏதோ திராவிட பித்தலாட்டம்திராவிட மாடலை ஊர் ஊராகச் சென்றுதெரு தெருவாகச் சென்று அதை அம்பலப்படுத்துங்கள். என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள்அவரது குடும்பத்தில் வேறு யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறிய பேட்டி இருக்கிறதாஇல்லையாஎன்று பாருங்கள். அவர்கள் மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி இருக்கிறார்களாஇல்லையாஎன்று பாருங்கள். அனைவருக்கும் சமூக வலைதளங்களில் பகிருங்கள்.

எனவேநம்முடைய பணி 25 ஆண்டுகால ஒட்டுமொத்தமாகச் சாதனைகளை நிகழ்த்திய நாம் அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நம்முடைய புதிய தமிழகம் கட்சி என்பது நம்முடைய மக்கள் என்பது எல்லோரும் இரண்டற கலக்க வேண்டும். அனைவரும் நம்மை வாழ்த்தி இருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்னவென்று சொன்னால்ஒரு காலத்தில் 1985 வரையிலும் ஒரு கிராமத்தில் ஒரு பகுதியில் ஜாதி மற்றும் மத மாற்றம் நடைபெறும் என்றால் அவர்களுக்கு ஒரே தீர்வுதங்கள் மதம் மாறுகிறோம் என்று தான் அறிக்கை வரும். 1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் நிகழ்ச்சிக்கு நான் வந்து கால் வைத்த பிறகுதமிழ்நாட்டில் இன்று வரை தென் மாவட்டங்கள் மட்டுமல்லவட மாவட்டங்களில் மட்டுமல்லதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கூட ஒட்டு மொத்தமாக மதமாற்றம் நடைபெறவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். விருப்பப்பட்டால் நீ இயேசுவைக் கும்பிடுஅல்லாவைக் கும்பிடு அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த ஜாதியில் பிறந்து விட்டுஎனக்கு ஆபத்து வருகிறதுஎனக்கு கை கொடுக்க எவருமில்லைகொடுக்க எவரும் இல்லை என்ற அந்த குறை இல்லாத அளவிற்கு அந்த இடத்தை புதிய தமிழகம் கட்சி நிரப்பி இருக்கிறது. இங்குப் பல பேருக்குத் தெரியாது. 1982ல் இங்கு இருக்கக்கூடிய தென்காசி மாவட்டம்செங்கோட்டை அருகே மீனாட்சி புரத்தில் வெறும் கோவிந்தன் என்ற ஒரு ஓட்டுநர் ஒரு பெண்ணை கூட்டிச் சென்று விட்டார். அவரால் அந்த கிராமத்தில் இருக்க முடியவில்லை. அவர் கேரளா சென்று வேறு மதம் மாறி வந்தார். மதம் மாறி வந்த பின்னும் பிரச்சனை. அவருக்காக 50 குடும்பங்கள் மதம் மாறினார்கள். அந்த 50 குடும்பங்களுக்காக 1980ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வந்தார்அத்வானி வந்திருக்கிறார்சங்கராச்சாரியார் வந்திருக்கிறார். மீனாட்சி புரம் வராதவர்கள் விஷ்வ ஹிந்து பரிசத் – இந்து தலைவர்களோஎந்த கட்சியினருமே இல்லை. 1995 ஆம் ஆண்டிற்கு பிறகுதமிழகம் முழுவதும் அறவே மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். ஆனால் அதை எவருமே ஆவணப்படுத்தவும் இல்லைஇந்து அமைப்புகள் கூட அதை விளம்பரப்படுத்த வில்லை.

நாங்கள் 25 வருடத்தில் சாதனைகள் படம் எடுக்க வேண்டிய நிலைகள் என்னவென்றால்பல தொழிற்சங்கங்கள் போராட்டம் வைப்பார்கள். 100 கேட்பார்கள் ஐந்து ரூபாய் உயர்த்தி கொடுத்து விட்டால் வெற்றி வெற்றி என்று போஸ்டர் ஒட்டிக் கொள்வார்கள். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு 1998-க்கு முன்அதிகபட்சம் 65 ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால்புதிய தமிழகம் கட்சி 1998-99 போராட்டத்தின் வாயிலாக 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 115 ரூபாய் சம்பளம் உயர்வு பெற்றனர். ஆனால் எந்த இடத்திலும் நாங்கள் போஸ்டர் அடித்து ஒட்டவில்லைஎங்கள் சாதனை என்று சொல்லவில்லை. எனக்கு எப்பொழுது உண்மையின் மீது மட்டுமே நம்பிக்கை உண்டு. நியாயத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உண்டு. அதைத் தான் நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும். யார் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். வரலாற்றில் உண்மை மட்டுமே வெற்றியை அடையும் என்ற நம்பிக்கை கொண்டவன். அந்த அடிப்படையில்தான் நான் எங்கும் எதற்கும் விளம்பரம் செய்ததே இல்லை.

1997-ல் சட்டமன்றத்திலே வெள்ளை அறிக்கை கேட்டுப் போராடினேன். 98-ல் அண்ணன் விஸ்வநாதன் இடைத்தேர்தலில் வென்று வந்தார். அன்று இருந்த அவருக்கு நான் வெளி நடப்பு செய்ததெல்லாம். தெரிந்திருக்கும். தொடர்ந்து 30 நாட்கள் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கல்வியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் வீட்டின் முன்பு போராடிஉடனடியாக100 பேராசிரியர் பணியிடங்களுக்கு உதவி பேராசிரியர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின், 400 பேருக்குப் பணி ஆணை, 2011 சட்டமன்ற உறுப்பினர் இந்த போது நீதிமன்றம் சென்று ஒட்டுமொத்தமாக 1400 பேர் கல்லூரி பேராசிரியர்களாக சென்றார்கள். எத்தனை போஸ்டர் அடித்து ஒட்டுவதுஎவ்வளவு விளம்பரம் செய்வது.

அதேபோல இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அப்படிப்பு படித்தவர்கள் போதுமானதாக இல்லையே படித்தவர்கள் இல்லையே ” கிருஷ்ணசாமி என்ன செய்யலாம்” என்று அன்றைய முதல்வர் கேட்டார். ”பி.எஸ்.சிஎம்.எஸ்.சி படித்துள்ளவர்களை அப்பணிக்கு நிரப்புங்கள்” என்று சொன்னேன். அதில் பல ஆயிரம் இடங்கள் கிடைத்ததுசெவிலியர் இடங்கள் கிடைத்தது. அப்போது தான் முதல் முறையாக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் chief secretary ஆனார்டிஜிபி ஆனார்பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சேர்மன் ஆனார். இவ்வளவும் செய்து கொடுத்தோம். ஆனால்எந்த இடத்திலும் நாம் போஸ்டர் அடித்தது இல்லைவிளம்பரம் செய்ததில்லை. அந்த விளம்பரங்கள் எல்லாம் செய்யாவிட்டாலும் கூடஇன்று நம்முடைய கட்சி இவ்வளவு தூரத்திற்கு வலுவோடு நிலைத்து உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் நாம் உண்மையாக இருக்கிறோம் என்று எல்லா மக்களும் நம்புகிறார்கள்மக்களும் முழுமையாக விசுவாசமாக இருக்கிறார்கள்.

நான் தமிழக இளைஞர்களிடத்தில் முக்கியமாகக் கேட்டுக்கொள்வது நீங்கள் தேவையில்லாமல் ஆமைக்கறி இயக்குநர்கள் பாடும் சுய புராணத்தை நம்பிவாட்ஸ் அப் போராட்டங்களை நம்பிஅவர்கள் போடக்கூடிய முகநூல் அறிக்கைகளை நம்பி நீங்கள் மோசம் போய் விடாதீர்கள். அதனால் ஒன்றையும் சாதிக்க இயலாது. அவர்களுடைய வரலாற்றில் ஏதாவது ஒன்றைச் சாதித்த வரலாறு கூறுங்கள்; பார்ப்போம். வேண்டும் என்றால் தினமும் ஐந்து – பத்து நிமிடம் புகைப்படம் எடுத்துப் போட்டுசிரிக்கச் சிரிக்கப் பேசி ஏதாவது செய்து இருப்பார்கள். அவருடைய சாதனை என்னஅதனால் நீ பெற்ற பலன் என்னசமூகம் பெற்ற பலன் என்னஉன் கிராமம் பெற்ற பலன் என்னஉன் குடும்பம் பெற்றது என்னஉன் சகோதரன் பெற்ற பலன் என்னஅது போல எல்லாம் தடம் மாறிப் போனால்திசைமாறிப் போன பறவைகள் கூடு வந்து சேராது. ஆடும் மந்தையை விட்டு தனியாக சென்றால் குள்ள நரிகளிடம் தான் சிக்கும். நீங்கள் தனித்துச் செல்லும் போதுஎளிதாக எதிரிகளுக்கு இரையாவீர்கள். புதிய தமிழகம் கட்சி என்று சொல்லுகின்ற போது தான் மரியாதையைபாதுகாப்பைஉயர்வை, மதிப்பை உண்டாகும். ஒரு காலத்தில் நாம் கண் கூட பார்த்து இருக்கிறோம். நம்மை ஒதுக்கினார்கள்பேச மறுத்தார்கள்நம் அருகில் நிற்க கூச்சப்பட்டார்கள் இன்று அவையெல்லாம் மாறி இருக்கிறது. இன்று எல்லாம் மாறி இருக்கிறது. இன்று மிகப்பெரிய அடையாளத்தோடு பரிணமித்துக் கொண்டிருக்கிறது.

இந்து’ என்று நான் சொன்னதுடன் ”என்ன டாக்டர் கிருஷ்ணசாமி இங்கிருந்து ஆர்.எஸ்.எஸ் மாறிவிட்டார்சங்கியாக மாறிவிட்டார்முழு இந்துவாக மாறி விட்டாராநான் அப்படித்தான் இருந்தேன். நான் எப்பொழுது புதிதாக இந்துவாக மாறினேன். என்னுடைய அப்பா இந்துஎன்னுடைய அம்மா இந்துமுன்னோர்கள் இந்துதமிழ்ச் சமூகங்களுக்குள் எப்பொழுது சாதி இருந்தது. சிலப்பதிகாரத்தில் சாதி இல்லை. அன்று என்ன கூறியிருக்கிறார்கள்எல்லா சமுதாயங்களிலும் கைவினைஞர்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவு தான். உழவர் என்று வருகிறது. கைவினைஞர்கள் என்று வருகிறதே தவிரஉயர்ந்த ஜாதிதாழ்ந்த ஜாதிகாலனி என்று எங்குமே கிடையாது. இடைப்பட்ட காலத்தில் நம்முடைய தமிழ் சமுதாயத்தில் சாதி என்பது ஊடுருவி விட்டது. அதற்காக இந்த சாதி என்ற ஒரு நோயை நாம் கடந்து செல்ல வேண்டும். நடந்து செல்லும் போது காலில் முள் குத்தி விட்டால் காலை வெட்டி விட முடியுமாஅப்படி ஒரு பாதிப்பு இருந்தாலும் கூடசீழ் பிடிக்காமல் தடுக்க மருந்து எடுக்க வேண்டும் அல்லவாமதமாற்றம் என்பது எங்கிருந்தோ யாராலோ எதற்காகவோ கொண்டுவரப்பட்டது. 1000 ஆம் ஆண்டிற்குப் பிறகுமத்திய ஆசியாவிலிருந்து இஸ்லாமியர்கள் படை எடுக்கவில்லை என்றால் இங்கு இருக்கக்கூடியவர்கள் மதம் மாறி இருப்பார்களாஆங்கிலேயர்கள் இங்கே வந்து குடியேறவில்லை என்றால் டச்சுக்காரர்வரவில்லை என்றால்போர்ச்சிகீசியர்கள் வரவில்லை என்றால் கிறித்தவர்களாக மாறி இருப்பார்களாஏதோ ஒரு காரணத்திற்காக அங்கிருந்த வந்த காரணத்தினால்திணித்த காரணத்தினால் அச்சுறுத்திய காரணத்தினால் பல காரணங்களால் பல பேர் போயிருக்கிறார்கள். நான் அதில் தெளிவாக இருந்தேன். ஏன் நான் பிறந்த கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் குடும்பம் வெறும் 25 குடும்பங்கள் தான். பெரிதாக இல்லை. கொங்கு வேளாளர்கள் 100 குடும்பம்அருந்ததியர் 50 குடும்பம்விஸ்வகர்மா இரண்டு குடும்பம்இரண்டு சவர தொழிலாளர் குடும்பம், 3 சலவை தொழிலாளர் குடும்பம். அருந்ததியர்கள் அத்தனை பேரும் கிறிஸ்தவர்கள். அங்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தது. ஆனால் ஒரு தேவேந்திர குல வேளாளர் கூட ஒரு காலத்திலும் தங்களுடைய மதத்தை மாறவில்லை. அவர்கள் தங்களுடைய பூர்வீக உணர்வுகளோடு தான் இருந்தார்கள்பிரச்சினை சந்தித்தார்கள். 25 குடும்பங்கள் இருந்து, 100 குடும்பங்களைச் சந்தித்தார்கள். சுற்று வட்டாரங்களில் சந்தித்தார்கள். எங்களுடைய கிராமத்தைச் சுற்றி மூன்றே தேவேந்திரகுல வேளாளர்கள் கிராமங்கள் தான். ஒன்று மச்சகவுண்டன்புதூர்இன்னொன்று வசவநாயக்கன் பட்டிஇன்னொரு கிராமம் பொம்மிநாயக்கன்பட்டிமூன்று கிராமங்களில் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்வது என்றால் எவ்வளவு துன்பங்கள் அனுபவித்து இருப்பார்கள். ஒருவர் கூட மதம் மாற வில்லையே! ஆனால் உண்மையிலேயே அந்த அளவிற்கு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் தன்னுடைய பாரம்பரிய பண்பாட்டோடு இருந்து கொண்ட காரணத்தினால் அந்த ரத்தம் தான் என்னிடத்தில் உடம்பில் ஓடுகிறது தவிரஆர்.எஸ்.எஸ் வந்ததால் நான் இந்து அல்லநான் நானாக இருக்கிறேன்நான் என்னுடைய தந்தை உணர்வுஎன்னுடைய முன்னோர்களின் உணர்வுகள்பாரம்பரியத்தோடு இருக்கிறேன். வேறொன்றும் இல்லை. இதில் எனக்கு என்ன வெட்கம் இருக்கிறதுகூச்சம் என்ன இருக்கிறதுஎன்று சொல்வதில் எனக்கு என்ன பெருமை குறைந்து விடப்போகிறதுஇன்று ஒருவர் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொள்கிறார்கள்சிலர் தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்பட்டது. அது எப்போதும் இருக்குமாஅதை மாற்றத்தானே பட்டியலிலிருந்து வெளியேறப் போராடுகிறோம். உயர்த்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடியவர்களும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற நிலை ஏன் வந்ததுஅவைகளை எல்லாம் காலப்போக்கில் அவர்கள் எல்லாம் அப்படித்தான் நிகழும். அதற்காக நம்முடைய முன்னோர்களுடைய அடையாளம். பாரத பூமி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த அடையாளத்தை எல்லாம் நாம் செய்யப்போவது கிடையாது. மற்றவர்கள் சொல்லலாம் எந்த முத்திரை குத்தலாம். ஒரு சங்கடங்கள்சிரமங்கள் வருகிறது என்றால் நம்முடைய தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது.

நமது தொடர் போராட்டங்களால் நம்மீது அரிஜன் என்ற முத்திரை பொயிற்றுஆதி திராவிடர்தலித் என்ற முத்திரை போயிற்றுதேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளம் வந்திருக்கிறது. இந்துக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றை அடையாளத்தின் வரக்கூடிய காலகட்டம் வந்தே தீரும். அதுதான் நம்முடைய லட்சியம். தமிழர்களை ஒன்றுபடுத்துவதுதமிழர்களை அடையாளப்படுத்துவதுஇந்துக்களை அடையாளப்படுத்துவது. நம்பிக்கை என்பது வேறு. ஒரு இந்து இயேசுவை வணங்கக் கூடாது பொருளல்ல. கிறிஸ்தவர் அல்லாவை வணங்க கூடாது என்பது பொருளல்ல. ஏன் ஒரு பாடகர் யேசுதாஸ் ஒருவர் கிறிஸ்டியன் அவர் எப்படி ஐயப்பன் கோயில் சென்றார். எனவே நாம் நாமாக இருந்திட வேண்டும். நாம் நாமாக இருந்தால் கண்டிப்பாக எல்லா பெருமைகளும் வந்து சேரும். எல்லோருடனும் நேசமாகப் பழகவேண்டும். எல்லோரிடத்திலும் அன்பு. அரவணைப்புடன் செல்ல வேண்டும். உண்மையாக இருக்கவேண்டும் எல்லா மக்களுக்குமே வறுமை நீங்கி எல்லா மக்களும் வளம் பெற வேண்டும் என்று சொன்னால் எதிர்காலத்தில் புதிய தமிழகமும் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும். அது தனித்தோஇணைந்தோபல கட்சிக் கூட்டணியும் காலத்தின் கட்டாயம். ஆனால் ஆட்சி – அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு நம்முடைய புதிய தமிழகம் கட்சியினர் அடுத்த இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியலுக்கு வருகிறோம். அதற்காக நம்முடைய நேச சக்திகள் யாநட்பு சக்திகள் யார்என்பதை அடையாளம் கண்டுஅவர்களுடன் இணைந்து வாழக்கூடிய காலகட்டங்களிலே அது எந்த காலகட்டமாக இருந்தாலும் சரிஅந்த தேர்தலில் நாம் மகத்தான வெற்றியைப் பெறவேண்டும் என்று சொன்னால்கடந்த காலங்களையா போல தேர்தலுக்கு முன்பாக 10 நாள் 15 நாட்கள் பணிகள் கிடையாது. இனிமேல் ஒவ்வொரு நாளும் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் திராவிட மாடலை ஒவ்வொரு இடத்திலேயும் தோல் உரிக்க வேண்டிய இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ”திராவிடத்திற்கு மாற்று புதிய தமிழகம்திராவிட மாடலுக்கு மாற்றாக புதிய தமிழகம் தான்” என்ற கருத்தை அதை மனதில் ஏந்தி நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோரும் பங்களிக்க வேண்டும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்க வேண்டும்.

நம்முடைய 25 ஆண்டுக்கால சாதனைகளை இளைஞர்கள் இன்று மாநாட்டில் நேரடியாக பார்க்காவிட்டாலும் வீட்டிலிருந்து பார்த்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதைப் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நீங்கள் அந்த கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செய்வது ஒன்றே ஒன்றுதான். ”மதுவைப் பூரணமாக விட்டொழிக்க வேண்டும் – புகையை விட்டொழிக்க வேண்டும்எந்த விதமான பழக்கவழக்கங்களும் அடிமையாகக் கூடாது. காசு பணத்திற்கு அடிமையாகக் கூடாது. கொள்கைக்காக தன்னுடைய உடல்பொருள், ஆவி தேவைப்பட்டால் எந்த தியாகத்திற்கும் செல்ல புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நேரத்தில் வேண்டுகோள்.

நாம் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்து அடுத்த பாய்ச்சலுக்கு அரசியல் – அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாய்ச்சலுக்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். எனவே நம்முடைய புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக மாற்றத்தை உருவாக்கினோம். இந்த சமூக மாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால்அரசியல் – அதிகாரம் வேண்டும். அரசியல் – அதிகாரம் வேண்டும் என்று சொன்னால் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அவருடைய ஆதரவைப் பெறுவதற்கு உண்டான பணிகளை செய்ய வேண்டும். யாரையும் பகையாக பார்க்காதேயாரோடும் பகை கொள்ளாதே எல்லோரும் தமிழர்கள்எல்லோரும் இந்துக்கள் என்ற உணர்வுகளோடுவறுமையை முற்றாக ஒழித்துஏழ்மையை முற்றாக ஒழித்துஏற்றத்தாழ்வுகளை முற்றாக ஒழித்துதமிழ் சமுதாயத்தில் உள்ள இடைவெளிகளை மெல்ல மெல்ல குறைத்து எல்லாவற்றையும் ஒன்றாக்க வேண்டும். ஏழை – பணக்காரர் என்றகல்வி கற்றவர்கள் என்ற வேறுபாடுகளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உள்ளாக குறைத்து ஒரு மிகப்பெரிய பொதுவுடைமை – பொது உரிமை சமுதாயம் இந்தியாவில் உருவாகி இருக்கிறது என்று சொன்னால் அது தமிழகம். அதற்கு புதிய தமிழகம் கட்சி தான் வித்திட்டதுஅர்ப்பணித்து கொண்டது என்ற ஒரு லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக உங்களையெல்லாம் அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுஇந்த நிகழ்ச்சியிலே இவ்வளவு நேரம் அனைவரும் அமர்ந்து நம்முடைய உரையை முழுமையாக கவனத்துடன் கேட்டிருப்பீர்கள். இது மட்டுமல்ல இனி மேல் இவைகளை எல்லாம் சொல்லுக்கு அல்லசெயலுக்கான திட்டங்கள் என்ற அடிப்படையிலே செயல்படுங்கள் என்று கேட்டுக்கொண்டுஒட்டுமொத்தத்தில் இந்த மாபெரும் மாநாடு வெற்றி பெறப் பாடுபட்ட புதிய தமிழகம் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள்மாநிலச் செயலாளர்கள்ஒன்றிய நிர்வாகிகள்அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைக் கூறி அதேபோல இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு வகைகளைத் துணைபுரிந்து இருக்கக்கூடிய அனைவருக்கும். மேடையிலே இந்த மாநாடு நிறைவு பெறும் வரை அமர்ந்திருக்கக் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.!