போட்டியின்றி – 2 வார்டுகள், போட்டியிட்டு – 5 வார்டுகள், ஆகமொத்தம் 7 வார்டுகளில் மகத்தான வெற்றி! படை பலத்தை மட்டுமல்ல.! பண பலத்தையும் தோற்கடிக்க முடியும்..!!

அறிக்கைகள்
s2 489 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 23 Feb 2022

Loading

போட்டியின்றி – 2 வார்டுகள்,

போட்டியிட்டு – 5 வார்டுகள்,

ஆகமொத்தம் 7 வார்டுகளில் மகத்தான வெற்றி!

படை பலத்தை மட்டுமல்ல.!

பண பலத்தையும் தோற்கடிக்க முடியும்..!!

சட்டமன்ற, கிராமப்புற ஊராட்சி தேர்தல்கள் போல நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தனித்துப் போட்டியிட்டோம். அண்மைகாலமாக தமிழகத்தில் தேர்தல்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதை தமிழக மக்கள் மட்டுமல்ல, உலகமே நன்கு அறியும். கோடிகோடியாக பணம் பட்டுவாடா செய்யக்கூடிய வலு உள்ளவர்கள் மட்டுமே தேர்தல் களத்தில் போட்டியிடுகின்ற அவல நிலை  உருவாகிவிட்டது.

விளிம்பு நிலையில் வாழுகின்ற மக்களுடைய மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, சம உரிமை, சமத்துவத்திற்காக போராடக்கூடிய புதிய தமிழகம் கட்சியின் ஒரே பலம் மனோபலம் மற்றும் மக்கள் பலம் மட்டுமே. எதிர் அணியினரின் பண பலம் மட்டுமே நம்மை பல நேரங்களில் மனோரீதியாக பலவீனமடையச் செய்திருக்கிறது. எனினும், புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்து நாடாளுமன்ற, சட்டமன்ற, இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் எதிலும் போட்டியிடாமல் இருந்ததே இல்லை. மிக மிக மோசமான சூழலிலும் கூட தேர்தல் களத்தில் நின்றது மட்டுமல்ல, நிமிர்ந்தும் நின்றிருக்கிறோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டோம். எனினும் அஞ்சி ஒதுங்கி விடவில்லை. அதைத்தொடர்ந்து நடைபெற்ற எட்டு மாவட்ட கிராம ஊராட்சிகளிலும் பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டு பணப்பட்டுவாடா கட்சிகளுக்குச் சவாலாக விளங்கினோம்.

கிராம ஊராட்சி தேர்தல்களைக் காட்டிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பணமழை கொட்டும் என்பதை நன்கு அறிந்த போதிலும், 15 மாநகராட்சி வார்டுகளிலும், 22 நகராட்சி வார்டுகளிலும், 33 பேரூராட்சி வார்டுகளிலும் வேட்பாளர்களைக் களம் இறங்கினோம். அதில் தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டிய புரம்; விருதுநகர் மாவட்டம், . புதுப்பட்டி ஆகிய இரண்டு பேரூராட்சிகளிலும் போட்டியின்றி வெற்றி பெற்றோம். எஞ்சிய வார்டுகளில் வெற்றிக்கனியைப் பறித்தெடுக்க நமது கட்சி வேட்பாளர்களும், அவர்களுக்கு உற்ற துணையாக ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகிகளும்; மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கடந்த 10 தினங்களுக்கு மேலாக கடும் களப்பணி ஆற்றினார்கள்.

நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் நமது வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

நகராட்சி வார்டுபுதிய தமிழகம் வெற்றி -1

தென்காசி மாவட்டம்சுரண்டை நகராட்சி – 25 வது வார்டுதிரு. வினோத்குமார்

பேரூராட்சி வார்டுபுதிய தமிழகம் வெற்றி – 6

விருதுநகர் மாவட்டம். புதுப்பட்டி பேரூராட்சி – 4 வது வார்டுதிருமதி.வள்ளி பச்சமலையான்

தென்காசி மாவட்டம்கீழப்பாவூர் பேரூராட்சி – 3 வது வார்டுதிருமதி.மு.மாலதி முருகேசன்

தேனி மாவட்டம்கோம்பை பேரூராட்சி – 1 வது வார்டுதிருமதி. இரா.அழகேஸ்வரி

தூத்துக்குடி மாவட்டம்ஆத்தூர் பேரூராட்சி – 14 வது வார்டுதிரு. கேசவன்

போட்டியின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்கள்:

விருதுநகர் மாவட்டம். புதுப்பட்டி பேரூராட்சி – 2 வது வார்டுதிருமதி.சித்ரா சந்திரமூர்த்தி

தென்காசி மாவட்டம்சுந்தரபாண்டியபுரம் – 12 வது வார்டுதிருமதி. ரேவதி முருகன்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 70 வார்டுகளில் 1 நகராட்சி வார்டிலும், 6 பேரூராட்சி வார்டுகளிலும் ஆகமொத்தமாக 7 வார்டுகளில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றி அரசின் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம் ஆகியவற்றை எதிர்த்து, தனித்து நின்று வெற்றி பெற்ற மகத்தான வெற்றியாகும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நமக்கு மிகவும் நம்பிக்கையூட்டக் கூடியதாகவும், வருங்காலம் நமது என்பதை நிரூபிக்கும் வகையிலுமே அமைந்துள்ளது. 7 வார்டுகளில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, போட்டியிட்ட 70 வார்டுகளில் 3 வார்டுகளில் ஓரிலக்க வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். 12 வார்டுகளில் இரண்டாம் இடத்தையும், 8 வார்டுகளில் மூன்றாம் இடத்தையும், பிற வார்டுகளில் கணிசமான வாக்குகளையும் பெற்றிருக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நமது வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, புதிய தமிழகம் கட்சியின் போட்டியிட்ட இடங்களில் வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும்; கடந்த இரு வார காலமாக இரவு பகல் பாராது அரும்பாடுபட்ட மாநில, மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்று படைபலங்களை தோற்கடித்த நாம்,

இன்று பண பலத்தையும் தோற்கடிக்க முடியும் என நிரூபித்து இருக்கிறோம்.

தமிழகத்திற்கு புதிய தமிழகமே வழிகாட்டும்!

புதிய தமிழகத்தை உருவாக்க,

வீறு கொண்டு எழுவோம்.!

 

டாக்டர்..கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,

நிறுவனர்தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

23.02.2022.