புதிய தமிழகம் கட்சி – மாபெரும் உண்ணாவிரதம்..!

இந்நிலை நீடித்தால் 234 குடும்பங்கள் மட்டுமே தமிழக அரசியல் அதிகாரத்தை கபளீகரம் செய்யும் நிலை ஏற்படும். மீண்டும் தமிழக மக்கள் பணநாயகத்திற்கு அடிமைகளாக்கப்படுவார்கள்

அறிக்கைகள்
s2 269 Views
  • Dr Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr Krishnasamy
Published: 18 Apr 2021

Loading

பணநாயகத்திடமிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க”
புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் அலைகடலென திரண்டு வாரீர்!!
#ஜனநாயக_மீட்புப்போர்!

புதிய தமிழகம் கட்சி – மாபெரும் உண்ணாவிரதம்!
ஏப்ரல்- 22ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது.

அந்நியப் படையெடுப்புகளுக்கு ஆளாகி அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தை மீட்டெடுக்க உயிர்த்தியாகம் செய்தும், வாழ்நாள் முழுமைக்கும் சிறைப்பட்டும், உடைமைகளை இழந்தும் அளப்பரிய தியாகங்களை செய்தோர் எண்ணிலடங்கா! அப்படி பெறப்பட்ட சுதந்திரத்தை – வாக்குரிமையை ஜனநாயகம் என்ற போர்வைக்குள் புகுந்து இலவசங்கள், பரிசுகள், நேரடி பணப் பட்டுவாடா என்று மிட்டாய்களை காட்டி ஊழல் பெருச்சாளிகள் கொள்ளை அடிக்கிறார்கள். இலை மறைவு: காய் மறைவாக ஆங்காங்கே இடைத்தேர்தல்களில் நடைபெற்றுவந்த பணப்பட்டுவாடா இப்பொழுது பட்டப்பகலில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 25 கோடி முதல் 50 கோடி வரை நடைபெறுகிறது.

இந்நிலை நீடித்தால் 234 குடும்பங்கள் மட்டுமே தமிழக அரசியல் அதிகாரத்தை கபளீகரம் செய்யும் நிலை ஏற்படும். மீண்டும் தமிழக மக்கள் பணநாயகத்திற்கு அடிமைகளாக்கப்படுவார்கள். எனவே இந்த அபாயகரத்தை தடுத்து நிறுத்திட நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யவும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக முதற்கட்டமாக வரும் 22ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. அதில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18.04.2021