காவல் பிடி மரணங்கள் – உயர்மட்டக் குழு விசாரணை தேவை!

அறிக்கைகள்
s2 507 Views
  • Lockup Death

    காவல் பிடி மரணங்கள் | Custodial Deaths

  • Lockup Death
Published: 13 Jun 2022

Loading

திருவள்ளூர் மாவட்டம் அலாதியைச் சேர்ந்த ராஜசேகர் நேற்றைய தினம் காவலர்களால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மரணமெய்திவிட்டார் என்று செய்திகள் வருகின்றன. இந்த மரணத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் இதுபோன்று விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படக் கூடியவர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகி மரணமெய்தும் செய்திகள் கடந்த சில மாதங்களில் மட்டும் அதிகமாக வருகின்றன. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை காவல் நிலைய மரணம் என்பதைவிட காவல்பிடி மரணம் என்றே கூறவேண்டும். இதுபோன்ற மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர்கள் மீது உயர்மட்ட குழு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.06.2022.