இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக வளர்வதற்கு குகேஷின் வெற்றி ஒரு மிகப்பெரிய உந்துதலாக அமையும்.!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள 18 வயதே நிரம்பிய இந்திய செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.!
18 வயதில் உலக செஸ் சாம்பியன் ஆவது அவ்வளவு எளிதானது அல்ல. உலகளவில் இளம் வயதில் அமெரிக்காவைச் சார்ந்த பாப்பி பிஷர், ரசியாவின் காரி காஸ்பரோவ் போன்றவர்கள் தான் அந்த சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
இந்தியாவின் ஆனந்த் உலக சாம்பியன் பெற்ற முதல் இந்தியர் ஆவர். தற்போது குகேஷ் வெற்றி பெற்று உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார். 140 கோடி இந்திய மக்களின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் செஸ் மீதான ஆர்வம் வளர்ந்து வரும் வேளையில் குகேஷின் வெற்றி இன்னும் கூடுதல் ஆர்வத்தை தூண்டும். செஸ் விளையாட்டு அறிவை கூர்மைப்படுத்தக்கூடிய ஒரு உன்னதமான விளையாட்டாகும். இந்தியா ஒரு அறிவார்ந்த சமுதாயமாக வளர்வதற்கு குகேஷின் வெற்றி ஒரு மிகப்பெரிய உந்துதலாக அமையும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.12.2024