தாயுள்ளத்தோடு பணியாற்றும் செவிலியர்களுக்கு, செவிலியர்கள் தின வாழ்த்துக்கள்!

அறிக்கைகள்
s2 449 Views
  • Sangeetha Hospital

    செவிலியர்கள் தின வாழ்த்துக்கள்!

  • Sangeetha Hospital
Published: 12 May 2021

Loading

செவிலியர்கள் மருத்துவத் துறையின் உண்மையான முன் களப்பணியாளர்கள் என்று சொன்னால் மிகையாகாது. நோயாளிகளுக்கு மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் செலுத்துவதிலிருந்து பெரும்பாலான மருத்துவப் பணிகளை உடனிருந்தே செய்யும் பொறுப்பில் உள்ளவர்கள். அவர்களின் கனிவும், அர்ப்பணிப்பும் நோய் குணமாவதில் முக்கிய அம்சமாகும். செயற்கை அறிவு (Artificial Intelligence) வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் நோயாளிகள் மருத்துவர்களை நேரடியாக அணுகாமல் வெகு தொலைவிலிருந்து கூட, Telemedicine மூலம் மருந்துகள் பரிந்துரை செய்து விடலாம். ஆனால், நோயாளிகளின் அருகில் செவிலியர்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்க இயலாது. தாயுள்ளத்தோடு கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றும் கோவை – சங்கீதா மருத்துவமனை மற்றும் அனைத்து செவிலியர்களின் பணி சிறக்க செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2021