பழ. நெடுமாறன் மகனின் மறைவு: டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆழ்ந்த இரங்கல்!
ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களின் புதல்வர் திரு. மாணிக்கம் மறைவுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அறிக்கைகள்
12 Views

Published:
03 Oct 2026
![]()
இரங்கல் செய்தி!
அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களின் புதல்வரும் புத்தத் துறவியுமான, ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த திரு. மாணிக்கம் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அன்பு அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.10.2026







