அஇஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியே தொடர வழி உண்டாகியிருக்கிறது. வாழ்த்துகள்!
அறிக்கைகள்
527 Views
Published:
23 Feb 2023
![]()
ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழுவில் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் கடந்த ஆறு மாதங்களாக நிலவி வந்த ஐயப்பாடுகள் நீங்கி, தெளிவு பிறந்துள்ளது.
”வாய்மையே வெல்லும்” என்பதற்கு இணங்க இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் நீங்கி எடப்பாடி அவர்கள் அஇஅதிமுக பொதுச்செயலாளராக முழு சுதந்திரத்துடன் செயல்பட சிறப்புமிகு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத இவ்வரசிடமிருந்து மக்களைக் காப்பாற்றத் தோழமைகளை வலுப்படுத்தி தமிழகத்திற்கு நிரந்தர விடிவு காலத்தை உருவாக்க வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
23.02.2023.






