ஆலப்புழா படகு விபத்து – துயரத்தின் முடிவின் முடிவாக இருக்க வேண்டும்.!

அறிக்கைகள்
s2 337 Views
  • Bat Accident

    ஆலப்புழா படகு விபத்து - துயரத்தின் முடிவின் முடிவாக இருக்க வேண்டும்.!

  • Bat Accident
Published: 08 May 2023

Loading

நேற்று கேரளா – ஆலப்புழாவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி 22 பேர் மரணம் எய்திய செய்தி வருத்தம் அளிக்கிறது. அணைகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளில் இதுபோன்று படகு சவாரிகள் மேற்கொள்ளப்படுகின்ற பொழுது பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்; நிர்ணயிக்கப்பட்டதற்கு மேல் கூடுதலான நபர்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்ற விதிமுறைகளைப் பின்பற்றாததாலும், காற்றில் பறக்க விடுவதாலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. 22 உயிர்கள் என்பதை எண்ணிக்கையில் பார்க்காமல் மகிழ்ச்சிக்காக விடுமுறையைக் கழிக்கச் சென்றவர்களுக்கு நேரிட்ட இந்த விபத்தின் தன்மையை தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

கடைசியாக படகோட்டியின் மீது பழி போடப்படலாம். அது தீர்வாகாது. பயணம் செய்வோர், படகு நடத்துனார்கள், அதை நடத்தும் நிறுவனங்கள், மத்திய – மாநில அரசுகள் அனைத்தும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆலப்புழா படகு விபத்து போன்று ஒரு துயரம் இனி எக்காலத்திலும் நடக்காத வண்ணம் துயரத்தின் முடிவின் முடிவாக இருக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகும்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.05.2023