மூணாறு வேன் விபத்தில் மரணமெய்திய திருநெல்வேலி – மானூரைச் சேர்ந்த மூன்று குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கிடுக.!
330 Views
![]()
திருநெல்வேலி மாவட்டம் – மானூர் ஒன்றியம், மேலப்பாலாமடை (இந்திரா நகர்) மற்றும் கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 20 பேர் கேரள மாவட்டம் மூணாறில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வேனில் சென்ற போது, நேற்று இரவு 6.30 மணியளவில் போடி மெட்டு – தொண்டி மலை அருகே ஏற்பட்ட விபத்தில் பெருமாள் (59), வள்ளியம்மாள் (79), சுசிந்திரன் (8) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்கள்.
இவ்விபத்தில் 15 பேர் படுகாயத்துடனும், இருவர் மிகக் கவலைக்கிடமான நிலையிலும் தேனி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடியவர்களுக்கு நவீன உயரிய சிகிச்சை அளிக்கவும்; மரணமெய்திய மூவரின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சமும், காயமுற்றோருக்கு தலா 2 லட்சமும் நிவாரணமாக வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
23.04.2023.





