புதிய தமிழகம் கட்சியின் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் ராமையா @ முருகேசன் திடீர் மரணம் – இரங்கல் செய்தி.!

அறிக்கைகள்
s2 3 Views
Sudden death of New Tamil Nadu Party's Kuruvikulam Union Secretary Ramaiah @ Murugesan - Condolences
Published: 26 Apr 2026

Loading

புதிய தமிழகம் கட்சியின் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் ராமையா @ முருகேசன் திடீர் மரணம் – இரங்கல் செய்தி.!
……………………………………………….
1995ஆம் ஆண்டு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்து, கட்சியின் உண்மையான விசுவாசியாகவும் சமரசமில்லாப் போராளியாகவும் விளங்கிய குருவிகுளம் ஒன்றியச் செயலாளர் திருவேங்கடம் வே.ராமையா என்கிற முருகேசன் அவர்களது திடீர் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
கடந்த 24ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் குறித்த களப்பணி ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, சில முக்கியமான கருத்துக்களை எடுத்துரைத்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் கட்சியின் அனைத்துவிதப் போராட்டங்களிலும் தவறாது கலந்துகொண்ட அந்த அப்பழுக்கற்றத் தொண்டரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மறைவையொட்டி, அடுத்த மூன்று நாட்களுக்குத் தென்காசி மாவட்ட பகுதிகளில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அவரது இறுதிச் சடங்கில் தென்காசி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
26.04.2026