புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து.!
3 Views

![]()
புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து.!
உழைப்பின்றி உலகம் இயங்குவதில்லை. ஓரறிவு உயிரினங்கள் முதல் ஐந்தறிவு உயிரினங்கள் வரை அனைத்தும் உயிர் வாழவும், உணவுக்காக மட்டுமே உழைக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் தன் வயிற்றுப் பசிக்காக மட்டுமின்றி, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்காகவும் உழைக்கிறான்.
இருப்பினும், எல்லாக் காலகட்டங்களிலும் மனித வாழ்க்கை அவ்வாறு அமைந்ததில்லை. மிருகங்களைக் காட்டிலும் கொடுமையான வாழ்க்கையைப் பல காலம் அனுபவிக்க நேர்ந்தது. அதிலிருந்து விடுதலை பெற உழைப்பாளிகள் – மனித குலம் விடுதலை பெற பல நூறு ஆண்டுகள் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
1886-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில், பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே, ‘8 மணி நேர வேலை’ என்பது உலகெங்கும் சாத்தியமானது. அந்த மகத்தான நாளையே ‘மே தினம்’ அல்லது ‘உலக உழைப்பாளர் தினம்’ எனக் கொண்டாடுகிறோம்.
இந்த மே தின நன்னாளில், தமிழகம் உட்பட உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
01.05.2026






