தமிழகத்தின் வற்றாத ஒரே ஜீவநதியான தாமிரபரணி நதியை பாதுகாக்க தனி ஆணையம் வேண்டும்!
338 Views
![]()
திருநெல்வேலி மாவட்டம் – தாமிரபரணி நதி உற்பத்தியாகும் இடத்தை பார்வையிட்ட பிறகு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
வைகை பொய்த்துப்போனது – வந்தால்தான் காவேரி – தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதியான தாமிரவருணியைப் பாதுகாப்பது நமது அனைவரின் கடமை!
தற்போது தாமிரபரணி குடிப்பதற்கு உகந்ததல்ல, மாசடைந்துவிட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி நதி உற்பத்தி ஆகும் தலையணைப் பகுதியிலிருந்து கடலில் சேருவது வரை 130 படித்துறைகளில் பக்தா்கள் வழிபாடு செய்கின்றனா். அதேநேரம் பெரிய மற்றும் சிறிய ஆலைகளின் கழிவுநீா் ஆற்றில் கலக்கவிடப்படுகிறது. நகரங்களின் கழிவுநீரும் அப்படியே ஆற்றில் கலக்கிறது.
இதைத் தடுத்து, தாமிரபரணியைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விஞ்ஞானிகள், மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிா்வாகத்தினா் அடங்கிய பாதுகாப்பு ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி – தினமணி நாளிதழ்






