பாபநாச சுவாமி கோயில் பின்புறம் கேட் அமைப்பதை நிறுத்த வேண்டும்
436 Views
![]()
பாபநாச சுவாமி கோயில் பின்புறம் கேட் அமைப்பதை நிறுத்த வேண்டும்
புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி
விகேபுரம் , ஜூன் 21 : பாப நாச சுவாமி கோயில் பின் புறம் கேட் அமைப்பதை நிறுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறு வனர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறினார் . புதிய தமிழகம் கட்சி நிறு வனர் டாக்டர் கிருஷ்ண சாமி நேற்று நெல்லை மாவட்டம் , பாபநாசம் உலகம்மை சமேத பாப நாச சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் . பின்னர் பாபநாசம் கோயி லில் பிரச்னைக்குரிய கேட் அமைக்கும் இடத்தை பார் வையிட்டார்.
தொடர்ந்து அவ்வழியில் தனியார்கட் டிடங்களையும் , கோயில்க ளையும் , இஸ்லாமியருக்கு பாத்தியப்பட்ட முஸ்லிம் கட்டிடத்தையும் பாபநா சம் தலையணையையும் பார்வையிட்டார் . பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது : பாபநாச சுவாமி கோயில் தமிழகம் மட்டுமன்றி இந் தியாவிலேயே பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோயி லுக்கு தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் . ஆன்மீக முறைப்படி ஒவ்வொரு கோயிலிலும் தேர் அல்லது சப்பரம் உள்வீதி வெளிவீ திகளில் கொண்டு செல் வது வழக்கம் . ஆனால் இக்கோயிலில் சப்பரம் கொண்டு செல்லும் போது இந்த கேட் அமைப்பதால் தடையாக இருக்கும்.
ஓரிடத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட் டால் அல்லது அசம்பா விதம் ஏதும் நடந்தால் அரசு இதுபோன்ற நடவ டிக்கைகளை எடுக்கலாம் . ஆனால் பொதுமக்களும் பக்தர்களும் எவ்வித பிரச்னையும் இன்றி இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர் . எனவே பாபநாச சுவாமி கோயில் பின்புறம் நிரந்தர கேட் அமைப்பது சரியானது அல்ல . கோயிலை சுற்றி மாவட்ட நிர்வாகம் ஏற்க னவே தடுப்பு அமைத்துள் ளது . அதையே தொடர்ந்து செயல்படுத்தி வரலாம் . அதோடு பல ஆண்டுக ளாக இந்த வழியை தனி யார்கள் , ஆன்மீகவாதிகள் பயன்படுத்தி வந்துள்ள னர் . மாவட்ட நிர்வாகம்தன்னிச்சையாக முடி வெடுக்காமல் பொதுமக் களுக்கு இடையூறு இல்லா மல் , அவர்கள் நலன் கருதி கேட் அமைப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் . இது சம்பந்தமாக விரைவில் கலெக்டரை சந்திக்க உள் ளேன் . இவ்வாறு அவர் கூறினார் . அவருடன் மாநில துணை அமைப்புச்செய லாளர் சரஸ்வதி முருகன் , நகரச்செயலாளர் தேவச காயம் , நகர துணைச்செய லாளர் சுடலை கனி , மணி , அகஸ்தியர் அருவி இசக்கி துரை , சுடலை உரிமை மீட்பு குழுவினர் ராஜாராம் , மாரியப்பன் கபடி முருகன் , குமார் , சேகர் , மற்றும் இந்து முன் னணி பால்ராஜ் , மதிமுக கணேசமூர்த்தி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பிரதிநிதி அபுல் கலாம் ஆசாத் நகரத் தலை வர் மன்சூர் நிர்வாகிகள் யான் , ரசூல் முகமது , ஜெயி ஓய்வு பெற்ற எஸ்ஐ சந்தாமி லானி , கமால் , மைதீன் , அபூபக்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






