கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி.!

செய்திகள்
s2 594 Views
  • கிறிஸ்துமஸ் வாழ்த்து வாழ்த்துகள் - டாக்டர் கிருஷ்ணசாமி

    கிறிஸ்துமஸ் வாழ்த்து வாழ்த்துகள் - டாக்டர் கிருஷ்ணசாமி

  • கிறிஸ்துமஸ் வாழ்த்து வாழ்த்துகள் - டாக்டர் கிருஷ்ணசாமி
Published: 25 Dec 2022

Loading

இவ்வுலகில் இயேசு அவர்கள் அவதரித்த நன்னாளாம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நன்னாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் புதிய தமிழகத்தின் சார்பாகவும், என் சார்பாகவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொற்று தங்களையும் பற்றிக்கொள்ளும் என்று அனைவரும் அஞ்சிய காலத்தில் தொழு நோயாளிகளுக்கும் தொட்டு சிகிச்சை அளித்து மனிதநேயமும், அர்ப்பணிப்பும் மனித குலத்தின் அடையாளங்களாகத் திகழ்ந்திட வேண்டும் என வாழ்ந்து காட்டி வழிகாட்டியவர் இயேசு.

அவரது பிறந்த நாளை கொண்டாடும் இந்த உன்னத நாளில் மத நம்பிக்கைகள், வழிபாடுகள் ஏதுவாக அல்லது வெவ்வேறாக இருப்பினும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் வாழ்ந்து காட்டிட அனைத்து மதத்தினரும் சபதம் ஏற்போம்.!!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
25.12.2022