கீழவெண்மணிகள் இனிமேல் மேல வெண்மணிகளாகட்டும்.!!

செய்திகள்
s2 417 Views
  • Kilavenmai

    இழந்த மண்ணை – மாண்பை மீட்டெடுக்கப் போர்ப் பரணி.

  • Kilavenmai
Published: 25 Dec 2022

Loading

இம்மண்ணின் மக்கள்; செந்நெல் குடியினர்; (மூ)வேந்தர் குல வேளாளர்கள் அந்நிய படை எடுப்பிற்கு ஆளாகி சொந்த நிலத்தை இழந்து வறியவர்கள் ஆக்கப்பட்டு உயிர் வாழ உழைத்துப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். படி படிகளாக நெற்களை அனைவருக்கும் அளந்து கொடுத்து வாழ்ந்த மரபினர் இழந்த மண்ணை மீட்டெடுக்கப் போர் தொடுப்பதற்கு பதிலாக உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அரைப்படி நெல் உயர்வு கேட்டுப் போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

1968 டிசம்பர் 25ல் தமிழகத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இன்றைய நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் வாழ்ந்த பெண்கள், முதியோர், குழந்தைகள் என 44 தேவேந்திரகுல வேளாளர்கள் அவர்கள் வாழ்ந்த குடிசையிலேயே தீயிட்டு எரித்துக்
கொல்லப்பட்டார்கள்.!

54 ஆண்டுகள் புரண்டோடி விட்டன. இம்மண்ணின் பூர்வ குடி மக்களை – கூலிக்காரர்களாக அடையாளப்படுத்தியதால் – அவர்கள் உண்மை வரலாறு மறைக்கப்பட்டு விட்டன.

ஆண்டுக்கு ஒருமுறை கண்ணீர் அஞ்சலி செலுத்துவதால் மட்டும் நமது கடமை தீர்ந்து விடாது.!

கீழவெண்மணிகள் மேலவெண்மணிகளாக மேன்மையுற – இம்மண்ணின் உண்மையான சொந்தக்காரர்களுக்கும், வந்தேறிகளுக்கும் நடந்த உரிமை போராட்டம் திரிபு செய்யப்பட்ட – உண்மைகளை மறைத்து எழுதப்பட்ட தஞ்சை மண்ணின் வரலாறுகள் திருத்தி எழுதி உண்மைகள் உலகறியச் செய்யப்பட வேண்டும்.

இன்று கண்ணீர் அஞ்சலி.!
நாளை – இழந்த மண்ணை – மாண்பை மீட்டெடுக்கப் போர்ப் பரணி.!

டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.12.2022