புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாடு.!

செய்திகள்
s2 455 Views
  • வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாடு

    வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாடு

  • வெள்ளி விழா நிறைவு சிறப்பு மாநாடு
Published: 16 Nov 2022

Loading

ஸ்ரீவில்லிபுத்தூர் – டிசம்பர் 15, 2022 – வியாழன்

நிதி மற்றும் வரவேற்பு குழு அறிவிப்பு

புதிய தமிழகம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும்; கட்சியின் ஆணிவேராகவும், ரத்த நாளங்களாகவும், நரம்பு மண்டலங்களாகவும் விளங்கும் அனைத்து தாய்மார்களுக்கும், இளைஞரணி சகோதரர்களுக்கும், பெரியோர்களுக்கும் எனது வணக்கம்.!

புதிய தமிழகம் கட்சி துவங்கப் பெற்று 25ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழா ஆண்டு மாநாட்டை சிறப்புற நடத்திட அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டு இருப்பீர்கள் என்று முழுமனதுடன் நம்புகிறேன். 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 15 இல் துவங்கப்பட்ட நமது கட்சி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வெறும் நாட்களையும், வாரங்களையும், ஆண்டுகளையும் மட்டும் நாம் கடந்து வரவில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீர் கடலையும், செந்நீர் கடலையும் கடந்தே பயணித்து வந்துள்ளோம்.

புதிய தமிழகம் கட்சியின் ஓராண்டு கால சாதனைகளை வேறு எந்த இயக்கமும் ஓர் நூற்றாண்டில் கூட செய்திருக்க இயலாது. சமூக தளத்தில் வேறு எவரும் எண்ணிப் பார்க்க இயலாத செயல்களை, அரிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறோம். 1947 இல் பெற்ற சுதந்திர காற்றை, புதிய தமிழகம் கட்சியின் உதயத்திற்கு பிறகே, லட்சோப லட்சம் பேர் சுவாசிக்க முடிந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரமாயிரம் சாதனைகளுக்கும், அதற்குடைய வரலாறுகளுக்கும் சொந்தக்காரர்கள் நாம். கடந்த 25 வருடத்தில் நாம் கடந்து வந்த பாதைகள் வெறும் கல்லும், முள்ளும் மட்டுமல்ல.! ரத்தம் சிந்தியும், சொல்லொனா சித்திரவதைகளையும், ஆயிரமாயிரம் இன்னல்களையும் கடந்து வந்துள்ளோம்.! அதில் சிறைப்பட்டோர், சித்திரவதைப்பட்டோர், உயிரிழந்தோர், ஒன்றா.! இரண்டா.! அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி தான், 25 ஆண்டுகளாக தமிழக சமூக அரங்கிலும், அரசியல் அரங்கிலும் பீடு நடை போடுகிறோம்.

அன்று மட்டுமல்ல புதிய தமிழகம்.!

இன்றும் புதிய தமிழகமே.!

என்றும் புதிய தமிழகமே.!

அரசியல் – சமூக தளத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ளும் தளமே – மேடையே

டிசம்பர்-15 ஆம் தேதி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறவுள்ள ”வெள்ளிவிழா நிறைவு சிறப்பு மாநாடு”

இந்த மாநாட்டை வெற்றிகரமாக்க வேண்டியது நாம் ஒவ்வொருவருடைய கடமை. மாநாட்டை வெற்றிகரமாக்க மக்கள் திரளும் – நிதியும் மிக மிக அவசியம்.

அப்பணியை செவ்வனே ஒருங்கிணைக்கும் பொருட்டு, அனைத்து நிர்வாகிகள் அடங்கிய 225 பேர் கொண்ட பணிக்குழுவில் 125 பேர் அடங்கிய முதற்கட்ட பட்டியல் இன்று அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் பட்டியலில் மாநில, மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, கிளை மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகளின் பெயரும் இடம் பெறும்.!

டெல்லி செங்கோட்டையை.!

சென்னை கோட்டையை.!

நோக்கிய, நமது பயணத்திற்கான இம்மாநாட்டை வெற்றிகரமாக்க அனைவரும் நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும், உறுதியோடும் பணியாற்ற அன்புடன் வேண்டுகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA

நிறுவனர் & தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

16.11.2022

 

1 2 3 4 5 6 7