தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு.!
செய்திகள்
358 Views
Published:
09 Feb 2021
![]()
முகவரியில்லாத போலி கடிதங்கள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் மூலம், தலைவர் – டாக்டர் அய்யா அவர்கள் குறித்து, உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை, புதிய தமிழகம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் வே.க.அய்யர், டாக்டர் அய்யா அவர்களின் நேர்முகச் செயலாளர் பாலாஜி, மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்கள் வழக்கறிஞர் செல்வக்குமார், வழக்கறிஞர் பவுன்ராஜ், வழக்கறிஞர் பாலமுருகன், சென்னை வேல்முருகன், செங்கல்பட்டு அஜீத் ஆகியோர் நேரடியாகச் சந்தித்து புகார் அளித்தனர்.







