சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சமும் வழங்க வேண்டும்!
செய்திகள்
355 Views
Published:
13 Feb 2021
![]()
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்தி வாயிலாக அறிந்தேன். இந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. இதுபோன்ற விபத்துக்களை தொடர்ந்து பலமுறை நாம் சுட்டிக்காட்டியும் அரசின் மெத்தனப் போக்கின் காரணமாக அடிக்கடி தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. அரசு கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளுடன் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சமும் வழங்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.02.2021







