கலவரங்கள் செய்துதான் நாங்கள் கலவரத்தை நிறுத்தினோம் – டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

இராஜபாளையத்தில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட மாநாட்டில் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி எழுச்சியுரை

செய்திகள்
s2 452 Views
  • டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

    டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

  • Virudunagar Meeting
  • Virudunagar Meeting
  • Virudunagar Meeting
  • டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
  • Virudunagar Meeting
  • Virudunagar Meeting
  • Virudunagar Meeting
Published: 15 Feb 2021

Loading

டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி 

100 வருசமா திராவிடம் பேசுறான் சமூகநீதி பேசுறான் ஆனால் அவர்களுக்கு இன்னும் புரியலை நாம் ஏன் இந்த கோரிக்கையை வைக்கிறோம் என்று! ஆனால் தமிழே தெரியாத பிரதமர், வெறும் 4 வருடத்தில் நமது கோரிக்கையை புரிந்துகொண்டு பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றியிருக்கிறார்! டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

நமது மாநாடு துவங்கும் தினம் சிறப்பாக அமைந்திருக்கிறது. நேற்றையதினம் பாராளுமன்ற கூட்டத்தில் நமது நீண்டநாளைய கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் சட்டதிருத்தத்திற்கான பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை விட சிறப்பு இந்திய பிரதமரே சென்னையில் அரசுவிழாவில் கலந்துகொண்டு நமது சமுதாயத்தின் கோரிக்கைகளையும் சிறப்புகளையும் நாம் எதற்காக அந்த கோரிக்கை வைத்துள்ளோம் என்பதையும் பேசியிருக்கிறார்

ஒரு நாட்டின் பிரதமர் ஒரு சமூகத்தை பற்றி 10 நிமிடங்கள் பேசியது மிகவும் பெருமைக்குரியது ஆதலால் நாம் மத்திய அரசுக்கும் பரிந்துரைத்த மாநில அரசுக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

கடந்த 4 ஆணிடுகளாக புதியதமிழகம் இந்த கோரிக்கைக்காக பல கட்டங்களாக பல போராட்டங்களை கண்டுள்ளது!

மேற்கொண்டு இன்று இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கான பாராளுமன்ற நடைமுறைகள் தொடங்கியிருப்பதற்கு முழுமுதற்காரணம் புதிய தமிழகம் மட்டும்தான்!

சுதந்திரம் பெற்ற 47 இலிருந்து 90 வரை தொடர்ந்து கலவரங்கள் நடந்துகொண்டுதான் இருந்தது அத்தனை கலவரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது புதியதமிழகம் தான்!

அதற்கேல்லாம் அன்று சமூகநீதி பேசிய திராவிட காட்சிகள் நமக்கு கொடுத்த பெயர் கலவரக்கார்கள்.

கலவரங்கள் செய்துதான் நாங்கள் கலவரத்தை நிறுத்தினோம்! தென்தமிழகத்தில் அமைதி திரும்பியதற்கு புதியதமிழகம்தான் காரணம்.

யார் தடுத்தது?

தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை பற்றி மோடி பேசுவது அரசியலுக்காக என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள்!
 
ஏன்? பாஜகவுக்கு மட்டும்தான் தேர்தல் வருகிறதா? உங்களை எங்கள் கோரிக்கைப்பற்றி பேசவேண்டாம் என்று யார் தடுத்தது?
 
நீங்களும் பேசுங்க, எல்லோரும் பேசுங்க!
யார் தடுத்தது?