மதுவின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்போம்! கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று அறைகூவலிட்ட புதிய தமிழகம்!

செய்திகள்
s2 364 Views
  • No Alcahol
  • No Alcahol
Published: 03 Oct 2023

Loading

தமிழகத்தில் கொலை ,கொள்ளை, கற்பழிப்பு , பாலியல் பலாத்காரம், சாதி சண்டை , மதசண்டை , பள்ளிகளில் சக மாணவர்கள் இடையே சண்டை சச்சரவு வெட்டு குத்து என அனைத்து சட்ட விரோத செயல்களுக்கும் அடிப்படையாக அமைவது மது ஆகும்.

அப்படிப்பட்ட மதுவானது இன்று மனிதர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு தீய பழக்கமாகிவிட்டது . இந்த கெட்ட பழக்கம் எதிர் வருகின்ற தலைமுறையை முற்றாக சீரழிக்கின்ற பேராபத்தான பழக்கமாகும் .

மதுவை குடித்து உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு, குடும்ப நிம்மதியை கெடுத்து , உற்றார் , உறவினர்களிடையே நன்மதிப்பை இழந்து, வருமானத்தை இழந்து ஆண்மையற்றவர்களாகவும், சுயமரியாதை அற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்ற ஒரு பேராபத்து சூழ்நிலையை தடுத்து நிறுத்த வேண்டும் .

ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் வருமானத்தை சுரண்டி கொலுக்கின்ற ஆட்சியாளர்களின் கேடுகெட்ட மது விற்பனை சிந்தனையை அறவே ! ஒழிக்க தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி குரல் எழுப்பி வருவது தான் மிகப்பெரிய வரலாறு ஆகும் .

அதனடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே “குடிக்காதே வடிக்காதே”என முழக்கத்துடன் கூடிய பேரணியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் நடத்தினார். அதனூடாக மதுவின் தீமை குறித்து மதுவின் ஆபத்தை குறித்து அன்றே தீவிரமாக பொது மக்களிடையே எடுத்துரைத்தார் அதன் வாயிலாகத்தான் தென் தமிழகத்தில் குடிப்பதை மறந்து விட்டு ஒரு தலைமுறை படிக்க ஆரம்பித்தார்கள். என்றால் அது மிகையாகாது .

.1996 – 2001 மற்றும் 2011-2016 டாக்டர் அய்யா அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய போது சட்டமன்றத்தில் பல்வேறு முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து மதுவுக்கு எதிராக போராடிய வரலாற்று பெருமானார் டாக்டர் அய்யா அவர்கள்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி 16 புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மதுக்கடை மறியல் , அதே ஆண்டு டிசம்பர் 29 பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மதுக்கடை முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் போராட்டம் 100 பெண்களுடன் தலைவர் அவர்கள் கைது. செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் .

2023 ஆம் ஆண்டு கடந்த மே மாதம் பத்தாம் தேதி மேதகு ஆளுநர் மாளிகை நோக்கி மது கடைகளை மூட வலியுறுத்தி தலைவர் அய்யா அவர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி நடத்தி மேதகு ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் முறைகேடான டாஸ்மாக் பார்களை இழுத்து மூட வேண்டுமென மே 27 அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்.

மது எனும் அரக்கனை ஒழித்து கட்டுவதற்கு சாதி,மத, மொழி, இன வேறுபாடு இன்றி ஜூன்15 தென்காசி மாவட்டம் ,புளியங்குடியில் மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் வகையில் நூறு பொதுக்கூட்டங்கள் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு முதல் கூட்டம் புளியங்குடியில் துவங்கப்பட்டது .

அந்தப் பொதுக்கூட்டமானது தூத்துக்குடி, நெல்லை ,மதுரை ,தேனி ,திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

தமிழகமெங்கும் மதுக்கடை முன்பு மது பாட்டில் உடைப்பு போராட்டம் ஜூலை 15. ல் நடைபெற்றது .

6. 6 .2003 அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட கண்காணிப்பாளர் , மாவட்ட ஊழல் தடுப்பு அலுவலர்களிடம் மது ஒழிப்பு சம்பந்தமாக மனு கொடுக்கப்பட்டது .

இந்திய திருநாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திய மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான 2.10.2023 தமிழகமெங்கும் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் மது ஒழிப்பு வரலாற்று நாயகர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க..

தமிழகத்தில் இயங்கி வருகின்ற 5,500 க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். என புதிய தமிழகம் கட்சியினர்கள் 500 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மதுக்கடைகளை இழுத்து மூடிடவும்,பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

தமிழகமெங்கும் பெரும்பாலான ஊராட்சிகளில் மதுவிற்கு எதிராகவும் ,பூரண மது விலக்கிற்காக தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் , இந்த வரலாற்றுப் பெரும்பணியை செய்து முடித்த புதிய தமிழகம் கட்சியின் மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர ,பேரூர் மற்றும் துணைநிலை அணியின் பொறுப்பாளர்களுக்கும், நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் , வாழ்த்துக்களையும் , நன்றிகளையும் கோடான கோடி தாய்மார்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் .

தலைமையகம்
புதிய தமிழகம் கட்சி