ஈன்றெடுத்த தாயை வணங்குவோம்.! போற்றுவோம்.! புதிய தமிழகம் கட்சியின் அன்னையர் தின வாழ்த்து.!!

உலகெங்கும் வாழுகின்ற தாய்மார்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.!
ஈடு இணையற்று, எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அன்பு செலுத்தக்கூடிய ஒரே ஒரு ஜீவன் தாய் மட்டுமே! பத்து மாதம் சுமந்து, ஈன்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்து, நல்ல கல்வி கொடுத்து, ஒழுக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுத்து, ஆளாக்கி மகிழ்வதோடு மட்டுமின்றி தன்னுடைய வாழ்நாளெல்லாம் தான் ஈன்றெடுத்த பிள்ளைகள்மீது அக்கறை செலுத்தக்கூடிய அன்னையர்களுக்கு நன்றி செலுத்தும் முகத்தான் அனுசரிக்கப்படுவது உலக அன்னையர் தினத்தின் நோக்கமாகும்.
என்னை ஈன்றெடுத்து வளர்த்து, ஆளாக்கி உலக மக்களுக்கு தொண்டுள்ளத்தோடு பணியாற்ற அர்ப்பணம் செய்த எனது அன்னை தாமரை அம்மாளுக்கும் நன்றியையும் வணக்கத்தையும்; உலகெங்கும் வாழுகின்ற கோடான கோடி தாய்மார்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.05.2023