மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் பாபுஜி சுவாமிகள் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும் கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் அறக்கட்டளை நிறுவனமான பாபுஜி சுவாமிகள் அவர்களுடைய 46 வது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீக குருக்கள் ஆவது என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினருடைய பிரத்தியேக உரிமையாக இருந்த ஒரு நிலையை மாற்றி, எளிய கைவினைஞர் சமுதாயத்தில் உதித்து, தன்னைத்தானே செதுக்கி இன்று பலரும் போற்றக்கூடிய ஒரு ஆன்மீக குருவாக வளர்ந்திருக்கிறார். அவர் இன்னும் பன்னெடுங்காலம் வாழ்ந்து, பொருளாதாரம், அரசியல், சமூகம், குடும்ப சூழல் காரணமாக பலருக்கும் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வடிகாலாக அமையும் ஆன்மீக நெறியை தூய்மையாக முன்னெடுத்துச் செல்ல அவருடைய 46 வது பிறந்தநாளில் என் நெஞ்சை நிறைந்த வாழ்த்துக்களை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய பக்தர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28.05.2024