குவைத் தீ விபத்து – புதிய தமிழகம் கட்சி இரங்கல்

செய்திகள்
s2 45 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 13 Jun 2024

Loading

குவைத் நாட்டின் உள்ள அகமது கவர்னரகத்துக்கு உட்பட்ட மாங்காப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கி இருந்த ஆறு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், பலர் பலத்த காயமுற்று இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இச்செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீ விபத்தில் பலத்த காயமுற்றவர்களுக்கு உயரிய நவீன சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மத்திய அரசு ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அது எவ்விதத்திலும் போதாது. எனவே குறைந்தது ரூபாய் 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
13.06.2024