மனோஜ் பாரதி மறைவு – டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்
நினைவுகள்
143 Views
Published:
25 Mar 2025
![]()
இரங்கல் செய்தி !
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் புதல்வர் மனோஜ் பாரதி அவர்கள் மரணமெய்தினார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 48 வயதே நிரம்பிய மனோஜின் மரணம் அவர்களது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. அவரை இழந்து வாடும் அவரது தந்தை பாரதிராஜா மற்றும் குடும்பத்தாருக்கும் உற்றார், உறவினர், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD. Ex MLA,
(நிறுவனர் & தலைவர்)
புதிய தமிழகம் கட்சி.
25.03.2025






