திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் இரங்கல்.!

நினைவுகள்
s2 150 Views
  • 7
  • 7
Published: 09 Apr 2025

Loading

திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் இரங்கல்.!

தமிழக மூத்த அரசியல் தலைவரும், தலைசிறந்த தமிழ் ஆர்வலருமான திரு. குமரி அனந்தன் அவர்களுடைய மரணச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் மாபெரும் தேசியச் சிந்தனையாளர். சொல்லளவில் இல்லாமல் சமத்துவ எண்ணத்தை ஆழ்மனதில் கொண்டு செயல்பட்டவர். தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்; பேச்சாளர்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும் இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.04.2025