காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD Ex-MLA அவர்களின் ஆணைக்கிணங்க
பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் மனு அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பலூர் ஒன்றியத்தில் களரம்பட்டி
அம்மாபாளையம்
லாடபுரம்
மேலப்புலியூர்
எசனை
ஆகிய கிராம ஊராட்சிகளில் மாவட்ட செயலாளர் த.அருண்குமார் தலைமையிலும்
ஆலத்தூர் ஒன்றியத்தில் செட்டிகுளம்
சிறுவயலூர்
நக்கசேலம்
ஆகிய கிராம ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் குணா அவர்களின் தலைமையிலும்
வேப்பந்தட்டை ஒன்றியத்தில்
வெங்கலம்
தழுதாழை
தொண்டமாந்துறை
ஆகிய கிராம ஊராட்சிகளில்
ஒன்றிய செயலாளர் சிவசூரியன் தலைமையிலும்
கிராம ஊராட்சி தலைவர்களிடம் கோரிக்கை மனு நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் மேற்கு கபிலன், பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ், மதியழகன், மணிகண்டன், சத்தியராஜ், பிரகாஷ், வெங்கடேஷ், அறிவழகன், விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்
