புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க. 24.9.2023 இன்று காலை 10 மணியளவில்..
திருச்சி மேற்கு மாவட்டம், முசிறி கைகாட்டியில் புதிய தமிழகம் கட்சியின் புதிய அலுவலகம் மாநில துணைக் கொள்கை பரப்புச் செயலாளர் வாழையூர் குணா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .
1. முசிறி கைகாட்டி
2.சந்தப்பாளையம் ,3. புதிய பேருந்து நிலையம்,4. பெரியார் பாலம் ஆகிய நான்கு இடங்களில் புதிய தமிழகம் கட்சியின் கொடியேற்றப்பட்டது.
டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்! மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் !
டாக்டர் அய்யா அவர்கள் எழுதிய நூலினை நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது .
புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சி மேற்கு மாவட்ட பகுதிகளான முசிறி, தொட்டியம், உப்பிலியபுரம் ,துறையூர், தா.பேட்டை உள்ளிட்ட 5 ஒன்றியங்களில் புதிய கிளை நிர்வாகிகளை நியமிப்பது. மற்றும் ஒன்றிய,மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டது .
2. அனைத்து கிளைகளிலும் கொடியேற்றுவது, மது ஒழிப்பு பிரச்சாரத்தை வீடு தவறாமல் கொண்டு செல்வது.
3.எதிர்வரும் டிசம்பர் 15 புதிய தமிழகம் கட்சியின் 26 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு குறித்து சுவர் விளம்பரம் எழுதுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
4.கட்சியின் இமாலய சாதனைகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வது.
5. முசிறி, துறையூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அலுவலகங்களை திறப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் M. சின்னையன் அவர்கள் தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட செயலாளர்
ம. தினகரன், முசிறி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் , முசிறி நகர செயலாளர் சரத்குமார் , சமூக நல்லிணக்க அணி செயலாளர் வடிவேல், மாவட்ட விவசாய அணி செயலாளர் தமிழரசன், முசிறி நகர துணை செயலாளர் ராஜேஷ், , முசிறி ஒன்றிய துணை செயலாளர் முருகேசன்,தொட்டியம் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) மனோ . செந்தில் குமார், தொட்டியம் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் (மேற்கு ) துறையூர் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், காட்டுப்புத்தூர் நகர செயலாளர் நத்தம் பாண்டி, லால்குடி ஒன்றிய செயலாளர் அரசகுமார் ,லால்குடி நகர செயலாளர் சிவக்குமார், முசிறி ஒன்றிய இணை செயலாளர் ரூபன், முசிறி ஒன்றி இளைஞரணி செயலாளர் சரவணன், முசிறி ஒன்றிய துணை இளைஞரணி செயலாளர் “மெக்கானிக் “ராஜலிங்கம் முசிறி ஒன்றிய இணைச்செயலாளர் “மெக்கானிக்” ஜெயராமன் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் செட்டிகுளம் குணா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
