தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகரத்தில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் . அப்பகுதியில் 24 மணி நேரமும் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இருப்பது இல்லை. போதிய அளவு செவிலியர்களும் இருப்பதில்லை . அவசர ஆபத்து காலங்களில் சுகாதாரப் பணியாளர்கள் ஊசி போடும் அவல நிலை நீடித்துள்ளது.

தற்காலிக சுகாதார பணியாளர்கள் நியமனத்திலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. சுகாதார வசதி இல்லாமல் கழிப்பறைகள் சுகாதாரச் சீர்கேடோடு உள்ளது

வெறி நாய் கடித்து விட்டால் கூட இந்த மருத்துவமனையில் ஊசி இல்லை என தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் சூழ்நிலையும் தொடர்ந்து நிலவுவதால் இந்த அவல நிலையை களைவதற்கு யாரிடம் முறையிடுவது என மக்கள் பரிதவித்த போதுதான் எந்தப் பிரச்சினையை அணுகினாலும் அதை மேலோட்டமாக அணுகாமல் அதற்கு நிரந்தர தீர்வு காணும் தோணியிலே எதையும் அணுகக் கூடியவர் என்பதனை நன்கு அறிந்த பொதுமக்கள் டாக்டர் அய்யா அவர்களிடம் புகார் மனு கொடுத்தனர்.

அதனடிப்படையில் 16/9/2023 அன்று மதியம் 12:00 மணியளவில் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு திடீரென நேரடி கள ஆய்வுக்கு சென்றார். டாக்டர் அய்யா அவர்கள் வருவதை அறிந்து கொண்டு மருத்துவமனை முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவி பிலிஷிங் பவுடர் போட்டு அவசர அவசரமாக கொத்தனாரை வரவழைத்து கழிப்பறையில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மருத்துவர்களும் தலைவர் அவர்கள் வரும் பொழுது அவர்களின் சொந்த மருத்துவமனையை விட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அவசர பிரிவு மற்றும் உள் நோயாளிகள் ,புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறை என அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல தான் ஒரு தலைசிறந்த மருத்துவர் என்கின்ற அடிப்படையில் அரசு மருத்துவமனையை கள ஆய்வு செய்தார்.

24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும் . செவிலியர்கள் இருக்க வேண்டும் .அவசர காலத்திற்கு தேவையான மருத்துவ உபகரணம் மற்றும் மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.. எந்த வகையிலும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு தள்ளிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படக் கூடாது.

மக்கள் மீது மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டும் என்றெல்லாம் பணியில் இருந்த மருத்துவரிடம் வலியுறுத்திவிட்டு அங்கிருந்து மக்களை சந்தித்து விட்டு விடை பெற்றார்.

ஆளும் கட்சியினரிடம் கோரிக்கை வைக்கவில்லை. எதிர் கட்சியினரிடம் கோரிக்கை வைக்கவில்லை . இந்த மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள தலைவர் டாக்டர் அய்யா அவர்களிடம் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கை வைத்து அவர் எப்போதெல்லாம் இப்பகுதிக்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் பொதுமக்கள் அடிப்படைப் பிரச்சனை குறித்து மனு கொடுத்தனர் . உதாரணத்திற்கு ,குடிநீர் வசதி ,சாலை வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி ,மின் விளக்கு வசதி , கல்வி வசதி என அனைத்து தமிழ் மக்களும் நேரடியாக தலைவர் அவர்களை அணுகுகின்றார்கள்.

இந்த அணுகுமுறையானது தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்குள் பரவி செல்வதால் தினந்தோறும் பொதுமக்கள் தலைவர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தங்களுடைய சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி , பொது பிரச்சினை என்றாலும் சரி தொடர்ந்து மனு கொடுத்து அவற்றிற்கெல்லாம் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி தீர்த்து வைக்கின்ற ஒரு மகத்தான தலைவருடன் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
வாழையூர் குணா