புதிய தமிழகம் கட்சியின் தலைவர், நிகழ்கால புரட்சியாளர் டாக்டர் அய்யா அவர்கள் ஆணைக்கினங்க இன்று 27.05.2023 காலை 11.30 மணியளவில் தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக்கில் (Tasmac)1 லட்சம் கோடி ஊழல் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், மரக்காணத்தில் மதுவால் இறந்த 22 பேர் மரணத்திற்கு சிபிஐ விசாரனை செய்ய வலியுறுத்தியும் , தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரியும், தமிழகத்தில் சட்டவிரோத பார்களை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் M.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொ.பாலசுந்தரராஜ் மாநில துணை அமைப்பு செயலாளர், பழ.நாகேந்திரன் , மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், முன்னிலை வகித்தனர்… மேலும் மாவட்ட துணைசெயலாளர் M.அய்யனார், கலைச்செல்வன், பாலமுருகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் P.ராமமூர்த்தி, பெரியகுளம் (மேற்கு) ஒன்றிய செயலாளர் M.சண்முகவேல், பெரியகுளம் (கிழக்கு) ஒன்றிய செயலாளர் மகா (எ) பெருமாள், தேனி ஒன்றிய செயலாளர் M.முருகன், பாளையம் ஒன்றிய செயலாளர் பாண்டி, சின்னமனூர் நகர செயலாளர் குமார், கம்பம் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் தேவேந்திர கண்ணன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி, பெரியகுளம் ஒன்றிய இளைஞரணி சூர்யபிரகாஷ், அரண்மனைபுதூர் சுருளி, ஜெயபாண்டி, கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் பாலமுருகன், வீரபாண்டி பேரூர் செயலாளர் போத்துராஜா, தாமரைகுளம் பேரூர் செயலாளர் கார்ணமூர்த்தி, ஒன்றிய துணைசெயலாளர் ஆனந்த், தங்கப்பாண்டி, நாகராஜ், கோட்டூர் கருப்புதுறை, பிரசாந்த், கோபால்| பாண்டியராஜன் , கார்த்திக், சிண்ணப்பாண்டி, மற்றும் தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் .

பேரணி முடிவில் தமிழக அரசை திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.