செப்டம்பர் 15, தனது பள்ளிப் பருவம் முதல் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு பணியாற்றியதற்காக அன்றைய கோவை மாவட்ட ஆட்சியர் திரு ராமன் அவர்கள் தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தினார். (கோவை மாலைமுரசு).
தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து, கணிசமான நிதி உதவி அளித்து, அம்மக்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
ஜுலை 2, உடுமலை அருகே தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் ஏற்பாடு செய்த ஏழை மாணவ – மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழாவில் தி.மு.க இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கினார்கள்.
விமான நிலையங்களில் குரூப் IV பணியிடங்களில் காண்ட்ராக்ட் முறையைப் புகுத்தி தொழிலாளர் வயிற்றில் அடித்த்தற்கு தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். (கோவை மாலைமுரசு).
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதிகளில் இரண்டு தலைமுறைகளாக இரண்டு பட்டியலினமக்கள் நடைபாதை கூட இல்லாமல் தவித்தனர் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அன்றைய கோவை மாவட்ட ஆட்சியதிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மக்களுக்கு 30 அடி நடைபாதையும், 10 ஏக்கர் அரசு நிலமும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது. (கோவை மாலைமுரசு).
ஆகஸ்ட் 25, கோவை சங்கீதா மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை சார்பில் தாராபுரம் என்.சி.பி. மேல்நிலைப்பள்ளிக் கூடத்தில் இலவச சிகிச்சை முகாம் நடத்தினார்கள் அந்த முகாமில் தி.மு.க. மாவட்ட செயலாளர் திரு அ.கணேசமூர்த்தி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் திரு சாதிக்பாட்சா ஆகியோர் பங்கேற்றனர்.
