மனித உரிமை மீட்பு; வன்கொடுமை தடுப்பு; ஆர்ப்பாட்டம் ! கொட்டும் மழையிலும் வரலாறு படைத்த புதிய தமிழகம்!

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

1
Published: 19 Nov 2023

தென் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்ற படுகொலைகளையும்,
வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்திடவும் , அந்தப் பேராபத்தான போக்கினை கட்டுப்படுத்தி நிரந்தரமான தீர்வு கண்டிடவும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர்;
சரித்திர நாயகர்;

மனித உரிமை போராளி; டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில், இளம் புரட்சியாளர் டாக்டர் ஷ்யாம் அவர்கள் முன்னிலையில், திருநெல்வேலி ரயில்வே ஜங்ஷன் முன்பாக ஆர்ப்பாட்டம் 19.11.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . இயற்கை எப்பொழுதும் நமக்கு கை கொடுக்கும். அந்த வகையில் தலைவர் பேசத் தொடங்கியவுடன்,கொட்டும் மழையும் சட்டென்று நின்றது வியப்பானது.

தொடர் மழையினால் பேரணி தவிர்க்கப்பட்டது . ஒருவேளை மழை பெய்யாமல் பேரணி நடந்திருந்தால் பல்லாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அந்தப் பேரணியில் பங்கேற்று வன்கொடுமைக்கு எதிராக,
மனித உரிமைக்கான பேரணி என வரலாற்றில் பறைசாற்றப்பட்டிருக்கும் .

கொட்டும் மழையிலும், தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்றதுதான் வரலாற்றில் ஒரு மையில் கல்லாக ஆர்ப்பாட்டம் அமையப்பெற்றது . ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்பதற்காக மழை பொழிந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி , தலைவரின் அறைகூவலுக்காக வேன்களிலும், கார்களிலும், பேருந்துகளிலும், ரயிலிலும் கோடான கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய வகையில் அங்கே கட்டுக்கடங்காத கூட்டம் அணி வகுத்தது . ( அருகில் இருந்த கடைகள், ரயில்வே ஸ்டேஷன் நிலையம் என அனைத்து இடங்களிலும் பேரணி & ஆர்ப்பாட்டத்திற்காக வந்து ஒதுங்கியவர்கள் கூட்டம் ஏராளம் )

தான் பிறந்த சமூகத்தில் , எந்த குற்றமும் செய்யாமல் பொழுதுபோக்கிற்காக நாங்கள் கொலை செய்கிறோம். என்று ஆணவத்தோடு, திமிரோடு, ரவுடித்தனத்தோடு, போக்கிரித்தனத்தோடு ,பொறுக்கி தனத்தோடு, பொதுவெளியில் மறவர் சமூகம் சார்ந்த சில விரோதிகள் பேசுகிறார்கள் என்றால் இந்த சமூகத்திற்கு இனி வரும் காலங்களில் என்ன பாதுகாப்பு ?

( இந்த சமூகத்தின் பெயரால் இயங்கக்கூடிய சிறு, குறு, சந்து, பொந்து, லெட்டர் பேடு, கட்சிகள் எல்லாம் தேர்தல் காலங்களில் நாம் ஏன் அந்த சமூகத்தை பகைத்துக் கொள்ள வேண்டும் என்று சுயநலத்தோடு பதுங்கிக் கொண்டார்கள். ஒதுங்கிக் கொண்டார்கள் .அவர்கள் தான் தேர்தல் நேரத்தில் சமூகமாக வா என்று ஒப்பாரி வைப்பார்கள். யாரேனும் சமூகத்தில் இறந்து போனால் பந்தல் போட்டு உட்கார்ந்து வீர வசனம் பேசி செல்பி எடுத்து விளம்பரம் செய்து எதிரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஓடி மறையும் உதவாக்கரை தலைவர்கள் எல்லாம் இங்கே காண முடியவில்லை அனைத்து இயக்கங்களும் சமூக தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைவர் அவர்கள் அறைகூவல் இட்டும் எவரும் வராதது தான் எங்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது )

என்பதனை நன்குணர்ந்த சமூக ஆர்வலர்கள், புதிய தமிழகம் கட்சியினர்கள், பொதுமக்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து; புதிய தமிழகமாக டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் திருநெல்வேலியில் சங்கமித்தார்கள் .

இளம் புரட்சியாளர் ; ஷ்யாம் கிருஷ்ணசாமி அவர்கள் கண்டன உரை வீச்சு “தமிழகத்தில் திராவிடம் தான் எங்கள் உயிர் மூச்சு என்று முழங்கினீர்கள். திராவிடத்திற்குள் மறவர் = தேவேந்திர குல வேளாளர்கள் வர மாட்டார்களா?

தமிழ்த் தேசியம் பேசுகிறீர்களே தமிழ் தேசியத்திற்குள் மறவர் = தேவேந்திர குல வேளாளர்கள் வர மாட்டார்களா ?தேசியம் பேசுகிறீர்கள் தேசியத்திற்குள் தேவேந்திரகுல வேளாளர்கள் மறவரும் வர மாட்டார்களா? இந்துக்கள் என்று பேசுகிறார்கள் இந்துக்களுக்குள் தேவரும் தேவேந்திரகுல வேளாளர்களும் வர மாட்டார்களா ? உங்கள் வரையறை தான் என்ன”நாங்கள் ஒரு சாதியை எதிர்ப்பதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கிறோம்,அப்படி எதிர்க்க வேண்டும்,
ரவுடிகளை அடக்க வேண்டும் என்றால் இப்படி கூடிப் பேசிக்கொண்டு இருக்க மாட்டோம்.அப்படி வாயில் வாள் வீசும் பழக்கம் எங்களுக்கு எப்போதும் கிடையாது’ என அங்கே குழுமி இருந்தவர்களின் உணர்வைப் பிரதிபலித்தார் .

அவரைத் தொடர்ந்து இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில தலைவர் அருமை சகோதரர் சூசை அவர்கள் புதிய தமிழகம் கட்சி தென் தமிழகத்தில் பல்முனை போராட்டங்களை முன்னெடுத்து, மனித உரிமை ,வாழ்வுரிமை, மண்ணுரிமை, வழிபாட்டுரிமை,சமூக அமைதி அனைத்தையும் வென்றெடுத்த ஓய்வறியாத சமத்துவ போராளி தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் அளப்பரிய தியாகத்தை அர்ப்பணிப்பை, தூய்மையை ,மேன்மையை ரத்தின சுருக்கமாக . தனது கண்டன உரையில் பதிவு செய்தார்.

சாதாரண அரசியல் கட்சித் தலைவராக இருந்திருந்தால், தொடர் மழை காரணமாக இன்னொரு நாள் தள்ளி வைத்திருப்பார். அல்லது தான் நனைந்து அதனூடாக உடல்நிலை சரியில்லாமல் போனால் என்ன என்று தன்னை மட்டும் கருதிக் கொண்டு அந்த நிகழ்ச்சியை தவிர்த்திருக்கலாம். ஆனால் ஒரு போராளிக்கு மழை, வெயில், பசி, பட்டினி இதுவெல்லாம் காரணமாக அமைந்திடக் கூடாது. என்பதனை நிரூபிக்கும் வகையில் தன்னை போல தன்னுடைய தொண்டர்களையும் எதற்கும் தயார்படுத்துவதில் வல்லவர்.

எந்த லட்சியத்திற்காக எந்த நோக்கத்திற்காக கூடுகிறோமோ அந்த நோக்கத்தை அந்த லட்சியத்தை வென்றெடுப்பதற்காக எவ்வளவு பெரிய இடர்பாடுகளும்,துன்பங்களும், துயரங்களும் ,இயற்கை பேரழிவே வந்தாலும் கூட, முன்வைத்த காலை பின் வைக்காத போராளி தலைவர் என்பதனை நிரூபிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடிய கூட்டத்தினர்கள் மத்தியில் மனித உரிமை போராளி தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் சொற்பொழிவு மழை பொழிவை விட அதிகமாகவே இருந்தது.
இயற்கை எப்பொழுதும் நமக்கு மட்டுமே ஒத்துழைக்கும்; இயற்கை அன்னை தலைவர் பேச்சை தொடங்கும் போது சற்று மழை ஒதுங்கிக் கொண்டது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஆயிரம், 500 கொடுத்து எப்படி ஓட்டு வாங்கலாம் என்று ஓட்டு கணக்கு போட்டுக் கொண்டு அலைகிறார்கள். ஆனால் புதிய தமிழகம் கட்சி மட்டும் தான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒற்றுமையாக வாழ வைப்பது எப்படி ? என்பதை சிந்தித்து செயல்படுத்த விரும்புகிறது.

ஒவ்வொரு சமூகமும் சீரோடும் ,சிறப்போடும், சமநிலையோடும் ,பொருளாதார, சமூக, அந்தஸ்தோடும் , ஒற்றுமையோடும் , தன்மானத்தோடும் , தனித்துவத்தோடும், சுயமரியாதையுடனும், சுயமதிப்புடனும் வாழ வேண்டும் . ஒருவரோ ஒரு கும்பலோ சேர்ந்து கொலை செய்வதினாலோ வழிப்பறி செய்வதனலோ திருடுவதாலோ அவர்கள் சம்பந்தப்பட்ட சமூகத்திற்கு கெட்ட பெயர் வருகிறது. சமூக ஒழுக்கக்கேடு நடவடிக்கைகளில் ஈடுபடும் கயவர்களை களையெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சமூகத்தில் இருக்கின்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் அவர்களை திருத்த வேண்டும்.

நான் சார்ந்து இருக்கின்ற சமூகத்தில் சாதியின் பெயரைக் கேட்டு சிறுநீர் கழிப்பது போன்ற வன்கொடுமை செயலில் ஈடுபட்டிருந்தால் அந்த நபரை ஓங்கி கன்னத்தில் அறைந்து சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பேன்.
அதுபோல தமிழ்ச் சமூகத்தில் தங்களை தலைவர்கள்
என்று சொல்லிக் கொள்பவர்கள் அந்த சமூகத்தில் ஒழுக்கக்கேடானவர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும். மாறாக அவர்களைக் கொம்பு சீவி விடுவது அதையே வீரம் என்று மார்தட்டிக் கொள்வது ஆரோக்கியமான தமிழ்ச் சமுதாயத்திற்கு அழகல்ல.

தமிழகத்தில் திராவிடம், தமிழ் தேசியம்,பொதுவுடமை, தேசியம்,
இந்துத்துவம் ,இந்து மதம் என்றால் ஒரே மதமாகவும், ஒரே மனித குலமாகவும், கருத வேண்டும். திராவிடம் என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் , நாங்கள் திராவிடர்கள் என்ற உங்கள் பார்வையில் அனைவரையும் திராவிடர்களாக பார்க்க வேண்டும். மறவர்= தேவேந்திரகுல வேளாளர்கள் திராவிடர்களில் வருகிறார்களா இல்லையா ?

தமிழர்கள் என்றாலும் அனைவரையும் தமிழர்களாக பார்க்க வேண்டும். அப்படி தமிழர்களாகவும் இல்லாமல், திராவிடர்களாகவும் இல்லாமல் , இந்துக்களாகவும் இல்லாமல், ஒவ்வொரு சமூகத்தையும் பிரித்தாலும் சூழ்ச்சியால் நீங்கள் பெறுகின்ற வெற்றியோ அல்லது நீங்கள் வகிக்கின்ற பதவியோ மக்களுக்கு ஒரு போதும் பயன் தராது.

தென் தமிழகத்தில் குறிப்பாக ஒரு சமூகத்தினர்கள் இன்னொரு சமூகத்தினர்களை தொடர்ந்து படுகொலை செய்வது ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தினர் செய்வதாக அர்த்தம் ஆகாது. அது சாதி கலவரமும் அல்ல, சாதிய மோதலும் அல்ல, ஒரு குறிப்பிட்ட சாதியினர் சண்டியர் தனம் செய்கின்ற போக்கிரிகள், பொறுக்கிகள், ரவுடிகள், செய்யும் குற்ற செயல்களுக்கு அந்த சமூகத் தலைவர்கள் பொறுப்பேற்று அது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை அடக்க வேண்டும் .

சாதி கலவரம் என்றாலும் சாதி பிரச்சனை என்றாலும் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. தவறு செய்யாதவர்கள் எந்த சூழ்நிலையும் பாதிப்புக்கு உள்ளாக கூடாது தவறு செய்பவர்களை எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாக்கவும் கூடாது. அதுதான் மனித தர்மம்;

நாங்கள் நினைத்திருந்தால் சாலை மறியலோ
ரயில் மறியலோ வேறு உக்கிரமான போராட்டங்கள் அறிவித்து இருக்கலாம் .ஆனால் பொதுமக்களுக்கு நாங்கள் நடத்தும் போராட்டங்களால் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்ற வகையிலே நாங்கள் இது போன்ற ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். (இது போன்ற நேர்மையை தமிழக மக்கள் எந்த தலைவரிடம் எதிர்பார்த்து இருக்க முடியாது )

தென் தமிழகத்தில் கட்சி தொடங்கி 26 ஆண்டுகள் ஆன பிறகும் கூட ஒருபோதும் ஒரு சமூகத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை நாம் இதுவரை நடத்தியது இல்லை . கொடியங்குளம் கிராமம் பாதிக்கப்பட்ட போது அரச பயங்கரவாதத்தை கண்டித்து அரசுக்கு எதிராகத்தான் சென்னையில் பேரணி; டெல்லியில் பேரணி நடத்தினோம்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசுக்கு எதிராக தான் போராடி இருக்கிறோம்.அதேபோல் தமிழகத்தின் நிலவிய இரட்டைக் குவளை முறை அதனை கண்டும் காணாமல் ஆட்சியாளர்கள் மௌனமாக இருக்கிறார் என்பதற்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தி இருக்கின்றோம். பட்டியல் பிரிவினர், ஏழை எளிய விளிம்பு நிலை சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டவர்கள் நலனுக்காக வெள்ளை அறிக்கை போராட்டம் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டம் இப்படி மக்கள் நலனுக்காக தான் புதிய தமிழகம் போராடிய வரலாறு உண்டு.

ஒருபோதும் ஒரு சாதியை தூக்கியோ அல்லது தாழ்த்தியோ நானும் எனது கட்சிக்காரர்களே இதுவரை பேசியது இல்லை. அப்படி பேசுவதற்கு நானும் அனுமதித்ததில்லை . பொதுவெளியிலும் சரி கட்சி நிர்வாகிகளிடமும் சரி நான் பேசும் பொழுது சுயமரியாதை, தன்மானம் ,தனித்துவம், கல்வியின் அவசியம், தொழில் முனைவோர் ஆவது சமூகத்தில் அனைவரும் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். மது புகை போதைப் பழக்கத்தை விட்டு ஒழிக்க வேண்டும் . நல்ல பழக்கவழக்கங்கள், நன்னெறிகள் , நல்லொழுக்கம் இவற்றை பேணி காக்க வேண்டும் . என்று தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.( தமிழகத்தில் தொண்டர்களை நல்வழிப்படுத்துவதில் இது போன்ற அரசியல் ஆசான் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்க வேண்டும் )

இந்த ஆர்ப்பாட்டம் பேரணி கூடாது என்று சமூக விரோதிகள் கொக்கரித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஒரு சாதியை திட்டுவதற்கு அல்ல தமிழ்ச் சாதிகளிடையே, தவறு செய்பவர்களை அடையாளம் கட்டுவதற்கான ஆர்ப்பாட்டம் . சமத்துவத்தை பேணுவதற்கான ஆர்ப்பாட்டம்.

ஒரு சமூகத்துக்குள் ரவுடித்தனம், போக்கிரித்தனம், பொறுக்கி தனம், பொழுதுபோக்குக்காக கொலை செய்பவர்களை , அடையாளம் காட்டுவதற்கான ஆர்ப்பாட்டம். இதையெல்லாம் தமிழ்ச் சமூகங்கள் நன்கு உணர்ந்து கொண்டு அதுபோன்ற தீய கயவர்களை களை எடுக்க வேண்டிய ஆர்ப்பாட்டம் .

தமிழ்ச் சமூகத்திற்குள் ஏற்றத்தாழ்வற்ற சம நிலையை ஏற்படுத்த வேண்டும். அந்த லட்சியத்தை வலியுறுத்தும் வகையில் வேறு கட்சிகள் எல்லாம் கூட்டம் கூட்ட வேண்டும் என்றால் கோட்டர், பிரியாணி, பணம் கொடுத்து கூட்ட வேண்டும் . இந்தக் கூட்டம் கொள்கைக்காக கூடிய கூட்டம் ஒரு லட்ச ரூபா கொடுத்தால் கூட இது போன்று கொட்டும் மழையில் தொண்டர்கள் நிற்பதற்கான வாய்ப்பு வேறு கட்சியில் இருக்க மாட்டார்கள் . ஆகவே தமிழ்ச் சமூகத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுகிறோம்.

இனிவரும் காலங்களில் தமிழ் சாதிகள் ஒற்றுமையுடன், சம மதிப்புடன் சம பங்கு, சம உரிமை, ஆகிய பண்பு நலன்களுடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு விரோதமாக நடந்து கொள்வர்களை சமூகத்தை விட்டு புறக்கணியுங்கள். அவர்களைத் திருத்துங்கள். செம்மைப்படுத்துங்கள். இதுதான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்க விரும்புகிறோம்.

பொழுதுபோக்காக கொலை செய்தோம் என ஆணவத்தோடு சொல்லும் குற்றவாளிகளை என்கவுண்டர் புலிகள் எல்லாம் இப்போது எங்கே போனீர்கள்?

வேறு யார் வீட்டிலாவது பொழுதுபோக்குக்காக ஒருவரை கொன்றால் அவர்களுக்கு வலிக்குமா ?வலிக்காதா? பாதிக்குமா ?பாதிக்காதா ? காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று சொல்லக்கூடிய என்கவுண்டர் புலிகள் எல்லாம் தென் தமிழகத்தில் ஒருவரைக் கூட சுடுவதற்கு துணிவில்லையே ஏன்?காவல்துறையை நோக்கி தலைவர் கேட்ட கேள்வி மனசாட்சி உள்ள காவலர்கள் வெட்கி தலை குனிய வேண்டிய அவல நிலையில்தான் உள்ளது .

தென்தமிழகத்தில் தொடர்ந்து சாதிய கலவரங்கள் மேலோங்கிய காலத்தில் மூன்று முக்கியமான சமூகத்தினர்கள் காவல் நிலையத்தில் பணிபுரியக்கூடாது என்கின்ற சட்டமே நடைமுறையில் இருக்கின்ற பொழுது

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் ஒரு காவல் நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட காவலர்களும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தால் அந்த காவல் நிலையத்தை நம்பி வேறு சாதியினர் எப்படி புகார் கொடுக்க முடியும் ?
ஆகவே தான் தேவர், தேவேந்திரகுல வேளாளர்,நாடார் போன்ற சமூகத்தினர்களை எந்த காவல் நிலையத்திலும் பணியமர்த்தாமல் வேறு பகுதிக்கு பணியமர்த்த வேண்டும். அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தான் தென்தமிழகம் அமைதியாக இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

என்னுடைய குரல்..
சட்டமன்றத்தில் மட்டும் அல்ல..
பாராளுமன்றத்தை தாண்டியும்..
ஏன்.. ஐநாவுலயும் ஒலிக்கும்..!

இந்த கொட்டு மலையிலும் சுமார் 1 3/4 மணி நேரம் தலைவருடைய கண்டன உரை வீச்சு எதிர்கால சந்ததியினர்கள் அனைவரும் பாதுகாப்போடும், மதிப்போடும் ,மரியாதையோடும் வாழ்வதற்கான உத்தரவாதம் உள்ள கண்டன உரையாக அமையப்பெற்றது.

சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், மனித மாண்பு ,சமபங்கு, சம உரிமை, இதான் புதிய தமிழகம் கட்சிக் கொள்கை ,கோட்பாடு ,இலட்சியம் என்பதனை தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துக் கூறும் வரலாற்று சிறப்புமிக்க மனித உரிமைக்காக, வன்கொடுமை தடுப்புக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டமாக வரலாற்றில் முத்திரை பதித்தது.

வாழையூர் குணா