மதுரை கூடல் நகர் மாணவன் தமிழ்ச்செல்வன் சந்தேக மரணம்!
61 Views

![]()
மதுரை கூடல் நகர் மாணவன் தமிழ்ச்செல்வன் சந்தேக மரணம்!
மரணத்திற்கான உண்மை காரணம் வெளிக்கொணரப்பட வேண்டும்!
………………………………
மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பயின்று வரும் ஊராளிக் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவன், கடந்த 6 ஆம் தேதி காலையில் விளையாடச் சென்று, இரவு வரை வீடு வந்து சேரவில்லை.
அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் தேடியதில், அங்குள்ள நீர்நிலையில் பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இம்மாணவனுக்கும் வேறொரு சமுதாய மாணவிக்குமிடையே காதல் இருந்ததாகவும், மாணவியின் பெற்றோர் அம்மாணவனை பலமுறை எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அன்றைய தினம் மாணவன் சிலருடன் மீன்பிடிக்கச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்திருக்கின்றன. இந்த மரணம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. மாணவனின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதை வெளிக்கொண்டுவரவும், அது கொலையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.
– டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
– நிறுவனர் & தலைவர்,
– புதிய தமிழகம் கட்சி,
– 09.09.2026







