மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடமை தவறும் முதல்வர் ஸ்டாலின்.!
210 Views
![]()
கடந்த வாரம் தலைநகர் சென்னையில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் மீது கொலை தாக்குதல்; அதில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி நூலிழையில் உயிர் தப்பினார். இன்று தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ரமணி வகுப்பறையிலேயே வெட்டி கொலை. ஓசூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் கண்ணன் பட்டப் பகலில் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் அனுமதி. அதேபோல, வேலூரில் 13 வயது சிறுமி காமக் கொடூரர்களால் பாலியல் பலாத்காரம்.!
தமிழகமெங்கும் தினமும் இதுபோன்று வன்முறை காட்சிகள். சட்ட ஒழுங்கை பாதுகாக்கக் கடமைப்பட்டவர் அடுத்த தேர்தலுக்குப் பரப்புரையைத் துவங்குகிறார். என்ன நடக்கிறது தமிழகத்தில்.? சட்ட ஒழுங்கும் அமைதியும் கட்டிக் காக்க வேண்டியவர்கள் கட்சிப் பணிகளிலே மும்முரம் செலுத்துகிறார்கள். தமிழக முதல்வரின் செயல் தமிழக மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது.! தேர்தலுக்கு ஒன்றரை வருடத்திற்கு முன்பாகவே அடுத்த தேர்தலுக்குப் பரப்புரையைத் துவங்குவது சட்டவிரோதம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டும்; மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
20.11.2024





